உள்ளடக்கத்திற்கு செல்ல

பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.2,000 லஞ்சம்: விஏஓ கைது
பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.2,000 லஞ்சம்: விஏஓ கைது
ADDED : ஆக 07, 2026 08:19 PM

அ நிறம் | அளவு
திருச்சி: மண்ணச்சநல்லுார் அருகே, பட்டா பெயர் மாற்றத்துக்கு, 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய விஏஓ நந்தகுமார், 42, என்பவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம், ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் மணிவேல், 24. இவர், தன் கிராமத்தில் தாத்தா பெயரில் உள்ள நிலத்துக்கு பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய, ஆன்லைனில் விண்ணப்பித்தார்.
ராசாம்பாளையம் விஏஓ நந்தகுமாரை சந்தித்தபோது, 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். கொடுக்க விரும்பாத மணிவேல், திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மணிகண்டனிடம் புகார் அளித்தார்.
ராசாம்பாளையம் அலுவலகத்தில் மணிவேலிடம் பணம் வாங்கிய நந்தகுமாரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
