புலம்பெயர் தொழிலாளி மீதான தாக்குதல் சம்பவம் தமிழகத்துக்கு தலைகுனிவு; சொல்கிறார் திருமாவளவன்
புலம்பெயர் தொழிலாளி மீதான தாக்குதல் சம்பவம் தமிழகத்துக்கு தலைகுனிவு; சொல்கிறார் திருமாவளவன்
ADDED : டிச 31, 2025 02:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: புலம்பெயர் தொழிலாளி தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருப்பதாக வி.சி.க, தலைவர் திருமாவளவன் கண்டித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை; ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவரைக் காட்டு மிராண்டித்தனமாகத் தாக்கி, வெட்டிக் காயப்படுத்திய குரூரச் செயலை 'ரீல்ஸ்'என்னும் பெயரில் காட்சிப் பதிவாகச் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த அவலம் தமிழகத்துக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த அநாகரிகத்தை விசிக சார்பில் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம். இத்தகைய கேவலமான போக்குகளைத் தடுத்திடவும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் திருமாவளவன் கூறியுள்ளார்.

