பனிமூட்டத்தால் ஏற்பட்ட விபத்து: டில்லி - ஆக்ரா சாலையில் பஸ்கள் தீப்பற்றியதில் 13 பேர் பலி
பனிமூட்டத்தால் ஏற்பட்ட விபத்து: டில்லி - ஆக்ரா சாலையில் பஸ்கள் தீப்பற்றியதில் 13 பேர் பலி
UPDATED : டிச 16, 2025 02:54 PM
ADDED : டிச 16, 2025 07:40 AM

புதுடில்லி: டில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில், அதிகாலையில் பனிமூட்டம் காரணமாக, 6 பஸ்கள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதி தீப்பற்றிக் கொண்டன. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
டில்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கின்றன. இந்த சூழலில், பனிமூட்டம் காரணமாக, அடர்ந்த மூடுபனி காரணமாக ஆறு பஸ்களும், இரண்டு கார்களும் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. பின்னர் தீப்பற்றி எரிய தொடங்கியது. முதலில் ஒரு பஸ்சில் தீப்பற்றியது.
4 பேர் பலி
பிறகு அடுத்தடுத்து பஸ்களில் தீ வேகமாக பரவியது என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே பல தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் போலீசார் விரைந்தனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்தது. இந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பல வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானதால், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணியில் சிக்கல் நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் அதிகாலை பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

