தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பிரதமர் மோடியுடன் வெனிசுலா அதிபர் பேச்சு

பிரதமர் மோடியுடன் வெனிசுலா அதிபர் பேச்சு

பிரதமர் மோடியுடன் வெனிசுலா அதிபர் பேச்சு

8


ADDED : ஜூன் 04, 2026 01:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 01:24 PM

8


8
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்தியா வந்துள்ள வெனிசுலா அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

வெனிசுலா அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் 5 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரது இந்த பயணத்தில் இருநாட்டு உறவு, மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, மருந்துத்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்து மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அப்போது வெனிசுலா உடனான உறவை வலுப்படுத்த இந்தியா உறுதி கொண்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும் பிரதமர் மோடியை அவர் சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து டெல்சி ரோட்ரிக்ஸ், டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us