தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ விஜய் அலையிலும் அதிக ஓட்டுகள்: புள்ளி விபரங்களுடன் பா.ஜ., பெருமிதம்

 விஜய் அலையிலும் அதிக ஓட்டுகள்: புள்ளி விபரங்களுடன் பா.ஜ., பெருமிதம்

 விஜய் அலையிலும் அதிக ஓட்டுகள்: புள்ளி விபரங்களுடன் பா.ஜ., பெருமிதம்


ADDED : மே 20, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 05:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் சென்னையில் அளித்த பேட்டி:

கடந்த லோக்சபா தேர்தலில், 23 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிட்டது. அந்த தொகுதிகளில் பதிவான மொத்த ஓட்டு 2.50 கோடி. அதில், பா.ஜ., பெற்ற ஓட்டுகள், 49.18 லட்சம்; இதன் சராசரி 19.62 சதவீதம். இந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., 27, தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட ஆறு என, மொத்தம் 33 தொகுதிகளில் போட்டியிட்டோம்.

அந்த தொகுதிகளில், மொத்தம் பதிவான 66.03 லட்சம் ஓட்டுகளில், பா.ஜ.,வுக்கு 14.67 லட்சம் ஓட்டுகள் கிடைத்தன; இதன் சராசரி, 22.22 சதவீதம். அதாவது, 2024 லோக்சபா தேர்தலை விட, இந்த தேர்தலில் பா.ஜ., அதிக ஓட்டுகளை வாங்கி உள்ளது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 48 சதவீத ஓட்டுகளை வாங்கிய தி.மு.க.,வுக்கு, இந்த தேர்தலில், 24 சதவீதமாக ஓட்டு குறைந்துள்ளது. வி.சி.க., கம்யூனிஸ்டுகளின் ஓட்டு சதவீதமும் குறைந்துள்ளது.

தமிழக வெற்றி கழகத்திற்கு அடுத்து, அதிக ஓட்டு சதவீதத்தை பெற்ற கட்சி பா.ஜ., தான். விஜய் அலையிலும் பா.ஜ., தன் ஓட்டுகளை தக்க வைத்து கொண்டது மட்டுமில்லாமல், அதிக ஓட்டுகளை பெற்றுள்ளது. இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us