திருச்சியில் தேர்தல் பிரசாரம்; 13ம் தேதி துவக்குகிறார் விஜய்
திருச்சியில் தேர்தல் பிரசாரம்; 13ம் தேதி துவக்குகிறார் விஜய்
ADDED : செப் 05, 2025 05:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சட்டசபை தேர்தல் பிரசாரத்தை, 13ம்தேதி திருச்சியில் துவக்க, த.வெ.க., தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
த.வெ.க., தலைவர் விஜய், அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடக்க உள்ள, சட்டசபை தேர்தலை மையப்படுத்தி, அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது தேர்தல் பிரசாரத்தை, 13ம் தேதி திருச்சியில் அவர் துவங்க உள்ளார்.
ஒவ்வொரு நாளும் கட்சி ரீதியாக, இரண்டு மாவட்டங்களில் அவர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். பிரசாரத்தின்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட செயலர்களுக்கு, பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது.