sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காங்கிரசை 'மடக்கிய' விஜய் விவாகரத்து விவகாரம்

/

காங்கிரசை 'மடக்கிய' விஜய் விவாகரத்து விவகாரம்

காங்கிரசை 'மடக்கிய' விஜய் விவாகரத்து விவகாரம்

காங்கிரசை 'மடக்கிய' விஜய் விவாகரத்து விவகாரம்

38


UPDATED : மார் 01, 2026 10:46 PM

ADDED : மார் 01, 2026 07:49 AM

Google News

38

UPDATED : மார் 01, 2026 10:46 PM ADDED : மார் 01, 2026 07:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நிருபர்

'இந்த தேர்தலில், 41 தொகுதி கள், இரண்டு ராஜ்யசபா எம்.பி., பதவி, ஆட்சியில் பங்கு' என்பதில் காங்கிரஸ் மேலிடம் விடாப்பிடி யாக இருந்ததும், த.வெ.க.,வுடன் கூட்டணி வைக்க, காங்கிரசில் ஒரு தரப்பினர் முயற்சி மேற்கொண்டதும், தி.மு.க.,வை கோபப்படுத்தி யது. இதனால், துவக்கத்தில் காங்கிரசுடன் பேசுவதை, தி.மு.க., தள்ளிப்போட்டு வந்தது. ஆனால், கடைசி நேரத்தில் தி.மு.க.,வுடன் பேசுவதை காங்கிரசும் தாமதப்படுத்தியது.

கடந்த 26 தேதி இரவு செல்வப்பெருந்தகையை தொடர்பு கொண்ட டி.ஆர்.பாலு, 27ம் தேதி பேச்சு நடத்த வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த தகவலை, ஊடகங்களுக்கு தமிழக காங்கிரஸ் தெரிவித்தது. ஆனால், காங்கிரஸ் மேலிடம் இதற்கு அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில், 27ம் தேதி மாலை த.வெ.க., தலைவர் விஜய் மனைவி விவாகரத்து கேட்டு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு பற்றிய தகவல் வெளியானது. அதன்பின்னரே, தி.மு.க.,வுடன் அதிகாரப்பூர்வ பேச்சு நடத்த, காங்கிரஸ் மேலிடம் அனுமதி அளித்து உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், விஜய் மனைவி தாக்கல் செய்த மனு, திடீரென நேற்று முன்தினம் வெளியானதன் பின்னணியில் தி.மு.க., இருப்பதாகவும், காங்கி ரஸ் மேலிடத்தை வழிக்கு கொண்டு வர, இதை துருப்புச் சீட்டாக பயன் படுத்தியதாகவும் கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us