குற்றங்களை குறைக்காவிட்டால்... இன்ஸ்.,களுக்கு எச்சரிக்கை
குற்றங்களை குறைக்காவிட்டால்... இன்ஸ்.,களுக்கு எச்சரிக்கை
ADDED : நவ 08, 2025 12:35 AM

சென்னை: 'ரவுடிகளை ஒழிக்க, கொலைகள் நடக்காமல் இருக்க, முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், பதவி உயர்வில் சிக்கல் நேரிடும்' என, டி.எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு, ஐ.ஜி.,க்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மாநில அளவில் நடக்கும் குற்றங்கள், அவற்றை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, மண்டல வாரியாக ஐ.ஜி.,க்கள் ஆய்வு கூட்டங்களை நடத்தி உள்ளனர். இது குறித்து, டி.எஸ்.பி.,க்கள் கூறியதாவது:
காவல் நிலைய பதிவுகளில், விசாரிக்கப்படாத சி.எஸ்.ஆர்., ரசீதுகளே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். போலீசார், ரவுடிகளின் வீட்டருகே சென்று, விசாரணை செய்ததற்கான, 'லைவ் லொகேஷன்' விபரத்தை, இன்ஸ்பெக்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ரவுடிகள் குறித்து கிடைக்கும் தகவல்களை, 'பருந்து' செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
போலீஸ் நிலைய எல்லைகளில், பகுதி வாரியாக நடந்த குற்றங்கள் குறித்து நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். செயின் பறிப்பு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவோர், எளிதில் தப்பி செல்லாமல் இருக்க, தற்காலிகமாக 'செக் போஸ்ட்' அமைக்க வேண்டும்.
பகல், இரவு நேரங்களில், ரோந்து பணிகளில் கிடைத்த தகவல்களை, பதி வே டுகளில் குறித்து வைக்க வேண்டும்.
அமாவாசை நாளில் ரோந்து பணிக்கு, கூடுதலாக போலீசாரை நியமிக்க வேண்டும். முன் விரோதம், பழிக்கு பழி வாங்க துடிக்கும் எதிரிகள் உள்ளிட்டோரை கண்காணித்து கொலைகளை தடுக்க வேண்டும். போலீஸ் நிலைய எல்லைகள் தோறும், குற்றங்களை குறைக்க வேண்டும்.
டி.எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பணித்திறன் குறித்து, எஸ்.பி.,க்கள் ஆய்வு செய்வர். அவர்கள் தரும் அறிக்கை அடிப்படையில், மேல் நடவடிக்கை எடுக்கப்படும். பதவி உயர்வுக்கும் சிக்கல் ஏற்படலாம் என, ஐ.ஜி.,க்கள் எச்சரிக்கை செய்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

