தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தவெகவுக்குக் கூட நல்லது தான் நினைத்தோம்: இபிஎஸ் ஆதங்கம்

தவெகவுக்குக் கூட நல்லது தான் நினைத்தோம்: இபிஎஸ் ஆதங்கம்

தவெகவுக்குக் கூட நல்லது தான் நினைத்தோம்: இபிஎஸ் ஆதங்கம்

16


UPDATED : அக் 04, 2026 05:58 PM

ADDED : அக் 04, 2026 05:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 05:58 PM ADDED : அக் 04, 2026 05:55 PM

16


16
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:இன்று இந்த இரட்டை இலையை விமர்சனம் செய்ய நினைக்கும் தவெகவுகு கூட, நாம கரூர் விவகாரத்துல நல்லதுதானே நினைத்தோம்? அதான் நாம செய்த குற்றமா ? என அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: நான் பெரிய அரசியல்வாதியின் வாரிசோ, மிகப் பெரிய சினிமா நட்சத்திரமோ கிடையாது. உங்களில் ஒருவன். உங்க ஊருல, தெருவுல, வீட்டுல, நீங்க தினசரி சாதாரணமா பாக்குற அண்ணன், அப்பா, சித்தப்பா, பெரியப்பா மாதிரி, எளிய மனிதன், இந்த இபிஎஸ்.

எனக்கு மக்கள் படும் கஷ்டம் தெரியும், அன்றாட வாழ்க்கை தெரியும், பிரச்னைகளை தெரியும். அடுக்கு மொழியில் பக்கம் பக்கமாக, ரசிகர்களை மயக்குற மாதிரி, போலி வசனங்கள் பேசத் தெரியாது.

நான் கீழ இருந்து வந்தவன். அதனாலதானோ என்னவோ, மற்ற எல்லா கட்சி தலைவர்களை விட, இந்த விவசாயி இபிஎஸ்க்கு எதிராக, அத்தனை சூழ்ச்சிகள்.

இரட்டை இலை சின்னத்தை நினைச்சது நம்முடைய தவறா? இல்ல, உங்களை போல சாதாரண குடும்பத்தில் பிறந்தது என்னோட தவறா? எம்ஜிஆர், ஜெயலலிதாவும், கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது என, இந்நிமிடம் வரை நானும், தொண்டர்களும் , போராடி வருகிறோம் ஆனால்... அதற்கு எதிராக எத்தனை சோதனைகள்? எத்தனை சூழ்ச்சிகள்? எத்தனை துரோகங்கள் ? கட்சியை சூறையாட எத்தனை நாடகங்கள்?

இன்று இந்த இரட்டை இலையை விமர்சனம் செய்ய நினைக்கும் தவெகவுக்கு கூட, நாம கரூர் விவகாரத்துல நல்லதுதானே நினைத்தோம்? அதான் நாம செய்த குற்றமா ? அதற்கான பிரதிபலனாதான் நம்ம எம்எல்ஏக்ககளை பேரம்பேசி திருடிட்டு போக பாக்குறாங்களா? உயிரை கொடுத்து உழைத்த 6,000 கட்சி நிர்வாகிகளைப் பற்றியோ, இவங்களை நம்பி வெற்றிபெற வைத்த லட்சக்கணக்கான மக்களைப் பத்தியோ ஒரு நிமிடம் யோசித்து இருந்தால், இப்படி செய்ய மனசு வந்துருக்குமா? இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.

இந்த அறிக்கை உடன் இபிஎஸ் வெளியிட்ட வீடியோவை பார்க்க

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us