தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த ஹிந்துக்களே ஒத்துழைப்போம்

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த ஹிந்துக்களே ஒத்துழைப்போம்

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த ஹிந்துக்களே ஒத்துழைப்போம்


UPDATED : நவ 27, 2026 11:59 PM

ADDED : நவ 27, 2026 11:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 11:59 PM ADDED : நவ 27, 2026 11:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: உச்சநீதிமன்ற உத்தரவுபடி இன்று(நவ.,28) திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. இதில் பக்தர்கள் பங்கேற்கலாம் என பச்சைக்கொடியும் காட்டியுள்ளது. சட்டம் ஒழுங்கை காக்கவும், எவ்வித பிரச்னையுமின்றி தீபம் ஏற்றவும் மத்திய துணை ராணுவப்படை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் நடந்த முருகபக்தர்கள் மாநாட்டை ஹிந்துக்களும், பக்தர்களும் எப்படி கட்டுக்கோப்பாக இருந்து வெற்றிகரமாக நடத்திக்காட்டினார்களோ, அதுபோல் தீபத்துாணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக நடத்திக்காட்ட வேண்டும். நீதிமன்ற உத்தரவை சிறப்பாக நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும்.

ஏனெனில் நவ.,24ல் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி மாவட்ட நிர்வாகம், 144 தடை உத்தரவை பிறப்பித்தது. ஆனால் இன்று அந்த தடை இல்லை என்றாலும், சுயகட்டுப்பாட்டுடன் தீபத்துாணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திக்காட்ட பக்தர்கள், ஹிந்து அமைப்பினர் இதற்காக பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். அதே வேளையில் எந்த சூழ்நிலையிலும் பிற மதத்தினரை அவமதிக்கும் வகையிலோ, உணர்வுகளை தூண்டும் வகையிலோ பேசக்கூடாது, வலைத்தளங்களில் எழுதவும் கூடாது.

மத நல்லிணக்கமே தமிழகத்தின் பெருமை. அதை பேணும் வகையில் மக்கள் அனைவரும் அமைதியுடன் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று செயல்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னை எதுவும் ஏற்படாமல் அமைதி காப்பதே முருகப்பெருமானுக்கு செய்யும் சிறந்த தொண்டாக இருக்கும்.

எல்லோரும் தீபம் ஏற்றுகின்ற மலைப் பகுதிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவரவர் வீடுகளிலிருந்து முருகன் புகழ் பாடி தீபம் ஏற்றலாம். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி அமைதியாக தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தால் வரும் ஆண்டுகளிலும் இவ்வாறு தீபம் ஏற்ற வாய்ப்பு ஏற்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us