UPDATED : நவ 10, 2025 10:37 PM
ADDED : நவ 10, 2025 09:47 PM

புதுடில்லி : '' டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி, மக்களிடம் முழு உண்மையை சொல்வோம்,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
டில்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, மூத்த அதிகாரிகளுடனும், டில்லி போலீஸ் கமிஷனரிடமும் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து என்எஸ்ஜி, என்ஐஏ, தடயவியல் துறை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு செல்ல உத்தரவிட்டதுடன், இந்த தாக்குதல் தொடர்பாக உளவுத்துறையினருடன் தொடர்பில் உள்ளார்.
பிரதமரிடம் விளக்கம்
இதனைத் தொடர்ந்து அவரை பிரதமர் மோடி தொடர்பு கொண்டு டில்லியில் நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்தார்.
விசாரணை
டில்லியின் செங்கோட்டையில் சுபாஷ்மார்க் போக்குவரத்து சிக்னல் அருகே ஹூண்டாய் ஐ 20 காரில் 7 மணியளவில் குண்டுவெடித்தது. இதில் சில பாதசாரிகள் காயமடைந்ததுடன், அங்கிருந்த வாகனங்கள் சேதம் அடைந்தன. முதற்கட்ட விசாரணையில் சிலர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த10 நிமிடத்தில் டில்லி குற்றப்பிரிவு போலீசார், ஸ்பெஷன் கிரைம்பிராஞ்ச் போலீசார் விரைந்தனர். தற்போது என்எஸ்ஜி, என்ஐஏ குழுவினருடன் ததடயவியல் துறை நிபுணர்களும் இணைந்து விசாரணையை துவக்கியுள்ளனர். அனைத்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. டில்லி போலீஸ் கமிஷனர் மற்றும் குற்றப்பிரிவு அதிகாரிகளுடனும் பேசி இருக்கிறேன். அனைத்து வழிகளையும் ஆராய்வதுடன், அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்வோம். அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து முழு உண்மைகளையும் மக்களிடம் சொல்வோம். சம்பவ இடத்திற்கு செல்வதுடன், மருத்துவமனைக்கும் செல்ல உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஆறுதல்
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து அமித்ஷா ஆறுதல் கூறினார்.

