sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஸ்டாலினின் கடைசி அஸ்திரம்: அண்ணாமலை காட்டம்

/

ஸ்டாலினின் கடைசி அஸ்திரம்: அண்ணாமலை காட்டம்

ஸ்டாலினின் கடைசி அஸ்திரம்: அண்ணாமலை காட்டம்

ஸ்டாலினின் கடைசி அஸ்திரம்: அண்ணாமலை காட்டம்

24


UPDATED : டிச 13, 2025 07:38 AM

ADDED : டிச 13, 2025 07:34 AM

Google News

24

UPDATED : டிச 13, 2025 07:38 AM ADDED : டிச 13, 2025 07:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ''பொங்கல் தொகுப்புக்கு 3000 ரூபாய் கொடுப்பது, மகளிர் உரிமைச் சேவை கொடுத்தல், போன்றவை தான் ஸ்டாலினின் கடைசி அஸ்திரம். ஆனால் வரும் தேர்தலில் மக்கள் தெளிவான முடிவெடுப்பர்.,'' என பா.ஜ., தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவையில் தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேட்டி: உள்ளாட்சித் துறையில் ஊழல் நடந்திருப்பது சுட்டிக்காட்டி அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு அக்டோபர் 2025 இல் ஒரு கடிதம் எழுதி இருந்தது. அதில் 150 பேரை குறிப்பிட்டு, வாட்ஸ் அப் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை கொடுத்திருந்தது.

அது தொடர்பாக இதுவரை போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. அமலாக்க துறை மறுபடியும் டிசம்பர் 3ம் தேதி ஒரு கடிதத்தை எழுதி உள்ளது. 258 பக்கம் கொண்ட அந்த கடிதத்தில், அமைச்சர் நேரு தொடர்புடைய உள்ளாட்சி நிர்வாகம், குடிநீர் வளங்கள் துறையில் 1020 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதற்கான ஆதாரத்தை இணைத்துள்ளனர்.

இன்ஜினியர்களை பணியமர்த்தியதில் ஒரு இன்ஜினியருக்கு 25 முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக 882 கோடி ரூபாய் முதல் ஊழல் நடந்துள்ளது. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறையில், ஊராட்சி செயலாளர் எழுத்து தேர்வு நடந்துள்ளது. நேற்று முன்தினம் இதற்கான நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டது.

இந்தத் துறையின் இணையதளத்தை நேற்று பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் உள்ள குளறுபடிகள் வெளியாகி உள்ளது. உதாரணத்துக்கு கோவையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த பெண் ஒருவர், ஐநுாறு மார்க்கிற்கு 494 மார்க் வாங்கி செலக்ட் ஆகியுள்ளார்.

496 மதிப்பெண் வாங்கியவர் தோல்வி அடைந்துள்ளார். எந்த அடிப்படையில் தேர்வு செய்தனர் என்பது யாருக்கும் தெரியாது. கோவை, மதுரை, கரூர் மூன்று மாவட்ட பட்டியலை பகிர்ந்துள்ளோம். இதிலும் கூட லஞ்சம் கை மாறி இருப்பதாக தெரிகிறது. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியில், இதுவரை 77 லட்சம் பேர் பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்டுள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியலில் 12.5 சதவீதம் நீக்கப்பட்டுள்ளது ஆச்சரியம் மட்டுமல்ல, அதிர்ச்சியும் கூட. கடந்த தேர்தல்களில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டும் கூட, வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்த பணியின் முதல் கட்ட வெற்றி இது. 5.6 கோடி வாக்காளர்கள் தான் இருப்பர்.

பொங்கல் தொகுப்புக்கு 3000 ரூபாய் கொடுப்பது, மகளிர் உரிமைச் சேவை கொடுத்தல், போன்றவை தான் முதல்வரது கடைசி அஸ்திரம். ஆனால் வரும் தேர்தலில் மக்கள் தெளிவான முடிவெடுப்பர். அடுத்த தேர்தலை பொறுத்தவரை இப்போதைக்கு நான்கு முனை தேர்தல். தி.மு.க., தே.ஜ., கூட்டணி, விஜய், சீமன் உள்ளனர். கடைசி நேரத்தில் மாறும்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.






      Dinamalar
      Follow us