தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்புவதில் வருகிறது புதிய வசதி... விரைவில் அறிமுகம்

வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்புவதில் வருகிறது புதிய வசதி... விரைவில் அறிமுகம்

வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்புவதில் வருகிறது புதிய வசதி... விரைவில் அறிமுகம்

7


ADDED : அக் 14, 2026 02:29 PM

Follow on GoogleFavourite on Google

7

ADDED : அக் 14, 2026 02:29 PM


7
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: குறிப்பிட்ட தேதி, நேரத்தில் தானாகவே மெசேஜ்களை அனுப்பும் புதிய வசதிகளை வாட்ஸ் அப் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

மக்கள் அதிகம் பயன்படுத்தும் மெசேஜ் செயலிகளில் வாட்ஸ்அப் முதன்மையானது. இது பயனாளர்களின் தேவைக்கு ஏற்ப, ஒவ்வொரு அம்சங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது, பயனர்கள் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் செய்திகளை அனுப்பும் வகையில் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் பரிசோதித்து வருகிறது. இதன் மூலம் டெக்ஸ்ட், லிங்க்குகள், போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் அனுப்பாமல், தங்களுக்கு வேண்டிய நேரத்தில் திட்டமிட்டு அனுப்பிக் கொள்ளலாம்.

வாட்ஸ்அப்பில் மெசேஜை தயார் செய்துவிட்டு, சென்ட் பட்டனை அழுத்திப் பிடிப்பதன் மூலம், டெலிவரி செய்யப்படும் தேதி மற்றும் நேரத்தைத் தேர்வு செய்யும் ஆப்சன் தோன்றும். பயனர்கள் ஒரு நேரத்தில் ஒரு போட்டோ அல்லது வீடியோவை மட்டுமே அனுப்ப முடியும். திட்டமிடுவதற்கு முன்பு டிராயிங் எடிட்டர் மூலம் படத்தைத் திருத்தவோ அல்லது தலைப்பை சேர்க்கவோ முடியும். மேலும், 10 நிமிடங்கள் முன்பு தொடங்கி இரண்டு வாரங்களுக்கு முன்கூட்டியே செய்திகளை அனுப்ப திட்டமிடலாம்.

மெசேஜ்களை அனுப்பப்படுவதற்கு முன்பு அவற்றை பயனர்கள் ஒருமுறை பார்த்து நீக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அப்படி மெசேஜை நீக்கிவிட்டாலும், பெறுநருக்கு எந்த அறிவிப்பும் செல்லாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us