தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/எப்போது தேர்தல் வந்தாலும் இந்த ஆட்சியை மக்களே அகற்றுவார்கள்; சொல்கிறார் ஸ்டாலின்

எப்போது தேர்தல் வந்தாலும் இந்த ஆட்சியை மக்களே அகற்றுவார்கள்; சொல்கிறார் ஸ்டாலின்

எப்போது தேர்தல் வந்தாலும் இந்த ஆட்சியை மக்களே அகற்றுவார்கள்; சொல்கிறார் ஸ்டாலின்

89


UPDATED : ஜூன் 13, 2026 03:38 PM

ADDED : ஜூன் 13, 2026 01:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 13, 2026 03:38 PM ADDED : ஜூன் 13, 2026 01:59 PM

89


89
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள் என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திமுக ஆளுங்கட்சியாக மாற வேண்டும் என்றால் இன்னும் சுறுசுறுப்பாக வேகமாக செயல்பட வேண்டும். 6 மாதங்கள் கூட விமர்சனங்கள் செய்ய முடியாத அளவிற்கு இந்த ஆட்சி நடக்குமா என்று நான் சில நிகழ்ச்சிகளில் பேசினேன். ஆனால் நான் பேசியதை கவிழ்க்க சதியா என நமது எதிரிகள் அழத் தொடங்கிவிட்டார்கள். அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள்.

பொய்யான குற்றச்சாட்டு

தவெக ஆட்சியின் தோல்விகளை தொடர்ந்து சுட்டிக்காட்டுவோம். தவெக ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் பெருகிவிட்டன. இந்த ஆட்சியில் நாள்தோறும் நடக்கும் குற்றங்கள், சென்னையையும் பல ஊர்களையும் இருட்டில் தள்ளக்கூடிய மின்வெட்டு, பயிர்க்கடன் தள்ளுபடி நாடகம் என ஏன்டா இந்த ஆட்சிக்கு வாக்களித்தோம் என்று மக்கள் கோபமாகவும், ஆவேசமாகவும் வருத்தப்படுகிறார்கள். ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாக தவெக நிர்வாகிகள் பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்

ஷாப்பிங்!

அதிமுக எம்எல்ஏக்களை முதல்வர் விஜய் ஷாப்பிங் செய்து கொண்டு இருக்கிறார். இதை பார்க்கும் போது அவருக்கு தன் ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லையா அல்லது தமக்கு ஆதரவு கொடுத்த கட்சிகளின் மீது நம்பிக்கை இல்லையா? என்ற கேள்விதான் நமக்கு எழுகிறது. அதிமுகவினர் தவெகவில் இணைவதை பார்க்கும் போது, மற்ற மாநிலங்களில் பாஜவினர் செய்ததைத்தான் தமிழகத்தில் விஜய் செய்து வருகிறார் என்பது தெளிவாகிறது.

இதன் மூலம் அவர் பாஜவின் ஜெராக்ஸாகவே செயல்பட்டு வருகிறார். அவரு மொதல்ல CONFIDENTஆ இருக்காரா? தவெக ஆட்சி பாதுகாப்பு அளிக்கும் என பிரசாரத்தின் போது பேசினார்கள், ஆனால் இப்போது தவெகவிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என மக்கள் கேட்கும் நிலைக்கு தமிழகம் வந்துள்ளது. ஆட்சி அதிகாரத்தில் யார் இருந்தாலும் திராவிட மாடல் போட்டு கொடுத்து புளூ பிரிண்ட்ல்தான் செயல்பட முடியும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

இது சினிமா இல்ல!

மேலும் ஸ்டாலின் பேசுகையில், ''நான் முதல்வராக இருக்கும்போது டில்லி போனப்போ அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தப்பிக்க போனார் என்று சொன்ன விஜய் இப்போது எதுக்கு டில்லி போனார்? கரூர் வழக்குல இருந்து தப்பிக்கவா? நிபந்தனை இல்லாம கல்வி நிதியை கொடுக்கணும்னு மத்திய அரசிடம் கேட்டு இருக்கீங்க, இப்படி தான் செய்ய முடியும். ஏன்னா இது சினிமா இல்ல, ஆட்சி நிர்வாகம். முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள்'' என்றார்.



தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

திமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு; தினமலர் வெப் சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us