தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கனமழை கொட்டப்போகும் மாவட்டங்கள் எவை: பட்டியல் இதோ

கனமழை கொட்டப்போகும் மாவட்டங்கள் எவை: பட்டியல் இதோ

கனமழை கொட்டப்போகும் மாவட்டங்கள் எவை: பட்டியல் இதோ

5


UPDATED : ஜூன் 18, 2026 04:04 PM

ADDED : ஜூன் 18, 2026 03:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 18, 2026 04:04 PM ADDED : ஜூன் 18, 2026 03:14 PM

5


5
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.



இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் அரட்டவாடி பகுதியில் 12.52 செமீ மழை பதிவானது.

சுமார் 0.9 கிமீ உயரத்தில் கிழக்கு விதரபா முதல் தமிழக பகுதிகள் வரை தெலுங்கானா மற்றும் ஆந்திரா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது

சுமார் 3.1 கிமீ உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இதனால், இன்று( ஜூன்18)


நீலகிரி

கோவை

தேனி

திண்டுக்கல்

மதுரை

ஈரோடு

நாமக்கல்

திருச்சி

கரூர்

தஞ்சாவூர்

புதுக்கோட்டை

சிவகங்கை

அரியலூர்

பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் )கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை(ஜூன் 19)


நீலகிரி

கோவை

ஈரோடு

திருப்பூர்

தேனி

திண்டுக்கல்

மதுரை

சிவகங்கை

புதுக்கோட்டை

தஞ்சாவூர்

திருவாரூர்

நாகை

மயிலாடுதுறை

கரூர்

திருச்சி

அரியலூர்

பெரம்பலூர்

கடலூர்

கள்ளக்குறிச்சி

விழுப்புரம்

திருவண்ணாமலை

வேலூர்

திருப்பத்தூர்

கிருஷ்ணகிரி

தர்மபுரி

சேலம்

நாமக்கல்

புதுச்சேரி

காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை

வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மீனவர்கள் இன்றும், நாளையும் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் . இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us