sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கரூர் சென்ற முதல்வர் கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை: இபிஎஸ் கேள்வி

/

கரூர் சென்ற முதல்வர் கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை: இபிஎஸ் கேள்வி

கரூர் சென்ற முதல்வர் கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை: இபிஎஸ் கேள்வி

கரூர் சென்ற முதல்வர் கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை: இபிஎஸ் கேள்வி

8


ADDED : அக் 03, 2025 09:07 PM

Google News

8

ADDED : அக் 03, 2025 09:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல அங்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 68 பேர் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல கள்ளக்குறிச்சி செல்லாதது ஏன் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுபயணத்தில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இபிஎஸ் பேசியதாவது: கச்சத்தீவை மீட்பதற்கு இபிஎஸ் எதுவும் செய்யவில்லை என்று இன்று முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். கச்சத்தீவைப் பற்றி பேச அவருக்கு தகுதியில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிஇருக்கும்போதுதான் கச்சத்தீவை தாரைவார்த்தது .திமுக. 16 ஆண்டுகாலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகித்த திமுக இதுகுறித்து பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது. அடுத்தாண்டு தேர்தல் வருகிறது. மீனவர்கள் வாக்கு தேவைப்படுகிறது. அதனால் நாடகத்தை அரங்கேற்றுகிறார். உண்மையில் உங்களுக்கு அக்கறை இருந்தால், அப்போதே மீட்டிருக்கலாம். அப்போதெல்லாம் தவறவிட்டுவிட்டு எங்கள் மீது இப்போது குற்றம் சுமத்துவது எந்த விதத்தில் நியாயம்..?

கரூரில் நடந்த சம்பவத்தில் 41 உயிர்களை இழந்தோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல், அஞ்சலி செலுத்தினீர்கள். அதில் எந்தத் தவறும் இல்லை. உங்கள் ஆட்சியில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் பருகி 68 பேர் இறந்தார்கள், அப்போது ஏன் போகவில்லை, அவர்களை ஏன் சந்திக்கவில்லை.?. அவர்களுக்கு ஆறுதல் என் சொல்லவில்லை..?இப்போது ஏன் கரூருக்கு ஓடோடி சென்றார் என்றால் அடுத்தாண்டு தேர்தல் வருகிறது, மக்களிடம் அரசியல் ஆதாயம் தேடத்தான் சென்றுள்ளார். உண்மையிலே மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்காக செல்லவில்லை, எல்லா விஷயத்திலும் அரசியல் கணக்கு பார்க்கும் கட்சி திமுக.

இபிஎஸ்க்கு கொள்கை இல்லை என்கிறார். கொள்கை பற்றி பேசுவதற்கு உங்களுக்கு அருகதை இருக்கிறதா? பாஜவை எதிர்த்து இண்டி கூட்டணியை ஏற்படுத்தினர். மாநிலத்தில் எதிர் எதிராகவும், எம்பி தேர்தலில் ஒன்றாகவும் இருக்கும் நீங்களா கொள்கையுடைய கட்சி? உங்களூக்கு அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பதுதான் முக்கியம். மத்தியில் அதிகாரத்துக்கு வருவதற்கு எந்த வேஷமும் போடத் தயங்காதவர் திமுக தலைவர். அந்த அடிப்படையில்தான் இண்டி கூட்டணி அமைந்துள்ளது.

ஒவ்வொரு கட்சிக்கும் முரண்பட்ட கருத்துடைய நீங்கள் பேசலாமா? ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கையுண்டு. கூட்டணி வேறு, கொள்கை வேறு. கொள்கை என்பது நிலையானது அது அதிமுகவிடம் இருக்கிறது. திமுக பல தேர்தலில் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளீர்கள், நீங்கள் கூட்டணி அமைத்தால் நல்லது, அதிமுக அமைத்தால் தவறா? உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா? ஊழல் நிறைந்த திமுகவை நீக்கவேண்டும் என்பதில் ஒத்த கருத்துடைய அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது என்றே புரிந்துகொள்ள வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் மிசா சட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் சிறையில் இருந்தனர். உங்களை சிறையில் அடைத்த கட்சியோடு நீங்கள் கூட்டணி வைத்திருக்கிறீர்கள். அதிமுக அப்படியல்ல, திமுகவை அகற்றவே கூட்டணி வைத்தோம். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.






      Dinamalar
      Follow us