நாடு கடத்தப்படுவாரா நிரவ் மோடி? மனித உரிமைகள் கோர்ட்டில் விசாரணை
நாடு கடத்தப்படுவாரா நிரவ் மோடி? மனித உரிமைகள் கோர்ட்டில் விசாரணை
ADDED : ஏப் 15, 2026 12:29 AM

புதுடில்லி: குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, தன் உறவினர் மெஹுல் சோக்சி உடன் இணைந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் வெளிநாடு தப்பிச் சென்றார்.
கடந்த 2019ல் மத்திய அரசு வழங்கிய தகவலின் அடிப்படையில் பிரிட்டன் போலீசாரால் லண்டனில் கைது செய்யப்பட்டார். தற்போது வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றங்கள் அனுமதி அளித்துவிட்டன.
இந்நிலையில், நாடு கடத்தும் நடவடிக்கையை தடுக்க ஐரோப்பிய நாடான பிரான்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றை நீரவ் மோடி தாக்கல் செய்துள்ளார்.
அதில், 'இந்தியாவுக்கு அனுப்பப்பட்டால் அங்கு மனித உரிமை மீறல் நடக்கும், சித்ரவதை செய்யப்படுவேன்' என தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை ரகசிய முறையில் நடக்கும் என நீதிமன்றம் கூறியுள்ளது. இதில், சி.பி.ஐ.,யின் வாதங்களும் கேட்கப்படும்.
இந்த மனு நிராகரிக்கப்பட்டால், நிரவ் மோடியை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு நாடுகடத்துவதற்கான இறுதி சட்டத் தடையும் நீங்கும்.
