தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரூ.8,000 ஓட்டாக மாறுமா?

ரூ.8,000 ஓட்டாக மாறுமா?

ரூ.8,000 ஓட்டாக மாறுமா?

18


ADDED : ஏப் 02, 2026 06:58 AM

Follow on GoogleFavourite on Google

18

ADDED : ஏப் 02, 2026 06:58 AM


18
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்

ஒவ்வொரு குடும்பத்துக்கும் இல்லத்தரசி கூப்பன் வழங்கப்படும். அதில் ரூ.8,000 மதிப்புள்ள பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் என்கிறது தி.மு.க. இது பற்றி மக்கள் என்ன நினைக்கின்றனர்?



நாட்டின் சாபக்கேடு!

ரூ.8,000 'கூப்பன்' மக்களிடம் ஓட்டுக்காக நடத்தும் பேரம். இது நாட்டின் சாபக்கேடு. மக்கள் திருந்த வேண்டும். அதேசமயம், நம் பணத்தை நமக்கே தந்து அரசியல் சிம்மாசனத்தில் அமரும் அரசியல்வாதிகளுக்கு தக்க பதிலடி தர வேண்டும். அப்போது அவர்களும் யோசிப்பார்கள்.

-சுரேஷ், ஒர்க் ஷாப், காட்டூர்.

கல்வி, மருத்துவம் தரலாம்

இலவச பொருட்களோ, கூப்பன்களோ வழங்குவதற்கு பதி லாக, கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாக வழங் கலாம். அதையே எதிர்பார்க்கிறோம். ஒவ் வொருவருக்கும் கல்வி முக்கியம். அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த் தரத்தை 2 தினால், மக்கள் தனியார் பள்ளியை நாட மாட்டார்கள்.

அனைத்து விதமான நோய் களுக்கு சிகிச்சை கிடைக்கும் வகையில், அரசு மருத்துவமனைகளில்தொழில்நுட்ப ரீதியாக வசதியை மேம்படுத்தவேண்டும். இலவச கூப்பன் கொடுத்து விட்டு, அதை ஈடுகட்ட மற்ற பொருட்களின் விலையை உயர்த்தினால் என்ன செய்வது. இலவச கூப்பன் அவசியமற்றது.

-வெங்கடாசல மூர்த்தி, திருமலையாம்பாளையம்.

பொருட்களுக்கு விளம்பரம்

இலவசத்தின் புதிய பரிணாமம் கூப் பன் அறிவிப்பு. தகுதியுள்ள அனைத்து மக்களையும் இது சென்றடைகிறதா என்பது கேள்விக்குறி. இலவசமாக தரும் பொருட்களின் தரம் குறித்தும் கவனிக்க வேண்டும். தரமற்ற பொருட்களைமக் கள் தலையில் கட்ட இரு தரப்பும் செய்து கொண்ட ஒரு ஒப்பந்தமாக கூட இருக்கலாம்.

- கிர்த்திகா, சவுரிபாளையம்

பணம் கொடுப்பது மேல்

அரசாங்கமே பொருள் கொடுத்தா எல்லா ருக்கும் வாய்க்கும்னு சொல்ல முடியாது. இலவச மிக்ஸி, கிரைண்டர் நிறைய பேருக்கு வாய்க்கல. சீக்கிரம் ரிப்பேர் ஆகி பழைய பொருளுக்கு போட்டோம். பணமா கொடுக்கறது நல்லதுதான். பிடிச்ச பொருள நாமே வாங்கிக்கலாம். எந்தக் கட்சி கொடுத்தாலும் அது நம்ம வரிப்பணம்தானே.

-உமா, ராமநாதபுரம்.

யார் காதில் பூ சுற்றுகிறது

தி.மு.க. கடந்த தேர்தலில் 525 வாக்குறு திகளை அள்ளிவீசியது. அதில் பாதியை கூட செய்யவில்லை. மீதியையாவது வெற்றி பெற்றால் செய்கிறோம் என்று சொல்லலாம்.அதை விட்டு புதிதாக இப்படி ஒரு ஒரு அறிவிப்பை வெளியிட்டு யார் காதில் பூ சுற்ற பார்க்கிறது தி.மு.க.? மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.

-பி.எம்.தெய்வானை, ந.நா.பாளையம்.

சொந்த பணமா தராங்க?

இப்படியே மாறி, மாறி சொல்லிட்டு, பின்னாடி மறைமுகமா, மின்சார பில், வீட்டு வரி, சொத்து வரி அதிகரிச்சு, மக்கள் தலையில கை வைக்க போறாங்க. ஆட்சியில இருக்கறப்போ, நிதியே இல் லன்னு சொல்றாங்க. தேர்தல் சமயத்தில மட்டும் இஷ்டத்திற்கு அறிவிக்கிறாங்க. இதெல்லாம் சொந்த பணத்துலயா கொடுக்க போறாங்க?

-எஸ்.ஐஸ்வர்யா, ராமநாதபுரம்.

எங்க போய் நிக்குமோ

ஏதாவது கொடுத்தாதான் ஜனங்க ஓட்டு போடுவாங்கன்னு எல்லா கட்சிகளும் நம்புறாங்க. ஜனங்க கிட்டயும் அந்த எதிர்பார்ப்பு வந்துருச்சு. தி.மு.க., ஏற்க னவே ரூ.5,000 பணமும், சில்வர் பாத்தி ரமும் கொடுத்துட்டாங்க. இப்ப கூப்பன். ஜனங்க எது கொடுத்தாலும் வாங்கிக்கி றாங்க. இதெல்லாம் எங்க போயி நிக்கப் போவுதோ தெரியல.

-ஆர்.ராஜன், சிவானந்த காலனி.

தேவையற்ற அறிவிப்பு

எந்த கட்சியாக இருந்தாலும் இலவசங் களை அள்ளிவிட்டு ஐந்து ஆண்டுகளை ஓட்டிவிடலாம் என நினைக்கின்றனர். தரமான கல்வி, மருத்துவத்தை இலவச மாக வழங்குகிறேன் என அறிவித்தால் சிறப்பாக இருக்கும். ஒரு குடும்பத்தின் பெரும் செலவினமே அந்த இரண்டு தான். பிரிட்ஜ், கூப்பன் அறிவிப்புகள் தேவையற்றவை.

-காருண்யா, சித்ரா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us