தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பிரதமரின் தாயை கிண்டல் செய்வதா?: காங்., ராகுலுக்கு பா.ஜ., கண்டனம்!

 பிரதமரின் தாயை கிண்டல் செய்வதா?: காங்., ராகுலுக்கு பா.ஜ., கண்டனம்!

 பிரதமரின் தாயை கிண்டல் செய்வதா?: காங்., ராகுலுக்கு பா.ஜ., கண்டனம்!

30


UPDATED : செப் 21, 2026 01:46 AM

ADDED : செப் 21, 2026 01:45 AM

Follow on GoogleFavourite on Google

30

UPDATED : செப் 21, 2026 01:46 AM ADDED : செப் 21, 2026 01:45 AM


30
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாயை காங்கிரஸ் எம்.பி., ராகுல் கிண்டல் செய்ததற்கு, பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தின் இந்துாரில் 'சத்ரோன் கி கூஞ்ச்' என்ற மாணவர்களின் குரல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்ற, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல், நகைச்சுவை கலைஞர் புல்கித் மணியுடன் சேர்ந்து 'மிமிக்ரி' எனப்படும் பலகுரல் நிகழ்ச்சி நடத்தினார்.

அப்போது, பிரதமர் மோடி உலக நாடுகளின் தலைவர்களுடன் பேசுவது போல் இருவரும் நடித்து காண்பித்தனர்.

உறுதியான கடமை


கூட்டத்தினரை பார்த்து கையசைப்பது, பின் இருவரும் சிரிப்பது என பிரதமரின் உடல்மொழியை கிண்டல் செய்து இருவரும் நடித்தனர். பிரதமரின் மறைந்த தாயை கிண்டல் செய்தும் நிகழ்ச்சியில் நடித்து காண்பிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பேசிய ராகுல், 'நீங்கள் சாதாரணமான ஒருவராக உங்களுடைய நண்பரின் வீட்டுக்கு செல்லவில்லை. இந்திய பிரதமர், வெறும் நட்பை மட்டும் வளர்க்கும் பணியில் ஈடுபடக் கூடாது.

'அவர்களுடைய நட்பால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதே உறுதியான கடமை' என, கடுமையாக விமர்சித்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, ராகுலின் செயலுக்கு பா.ஜ., மூத்த தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சி.ஆர். கேசவன் கூறியுள்ளதாவது:

பிரதமரையும், அவரது தாயையும் கேலி செய்த போது, அதை ஆதரிக்கும் வகையில் ராகுல் சிரித்து ரசிக்கிறார்.

வயதான, பலவீனமான ஒரு தாயை கேலி செய்ததன் வாயிலாக, பெண்களை அவமதித்துள்ளார். நாட்டின் பிரதமரை கேலி செய்யும் வகையில் நடத்தப்பட்ட தரம் குறைந்த அந்த நாடகத்தை, எந்தவொரு ஒழுக்கமான நபரும் ரசிக்க மாட்டார்.

ஆனால், மேடையில் அமர்ந்து உரக்க சிரித்ததன் வாயிலாக, தன் பண்பற்ற மற்றும் நாகரிகமில்லாத, நாவடக்கமற்ற அரசியல் நடத்தையை ராகுல் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த அநாகரிக பேச்சு வழக்கு கலாசாரம்தான், அவராலும், காங்கிரஸ் கட்சியாலும் நாட்டின் இளைஞர்களுடன் ஒரு இணக்கமான தொடர்பை ஏற்படுத்த முடியாமல் போனதற்கு முக்கிய காரணம். தரக்குறைவான நிகழ்ச்சிகளை ஆதரிக்கும் ராகுலை, ஒரு அரசியல் தலைவராக ஒருபோதும் ஏற்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மனிதநேயமற்ற செயல்


'ராகுலும், காங்கிரசும் தார்மிக ரீதியாக அதலபாதாளத்திற்கு சென்று விட்டன.

'மாணவர்களுடனான ஒரு கலந்துரையாடலை பயன்படுத்தி, பிரதமர் மோடியின் மறைந்த தாயை கேலி செய்வதும், அவமதிப்பதும் அடிப்படை மனிதநேயமற்ற செயல்' என, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, கிரண் ரிஜிஜு, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us