தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வென்றவர்கள் பொறுப்போடு செயல்பட வேண்டும்; சத்குரு

வென்றவர்கள் பொறுப்போடு செயல்பட வேண்டும்; சத்குரு

வென்றவர்கள் பொறுப்போடு செயல்பட வேண்டும்; சத்குரு

17


ADDED : மே 06, 2026 08:10 AM

Follow on GoogleFavourite on Google

17

ADDED : மே 06, 2026 08:10 AM


17
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ஜனநாயக திருவிழாவில் வெற்றி பெற்றவர்கள், மக்கள் மீது பொறுப்புணர்வுடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டும் என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

தமிழகம், கேரளம், மேற்குவங்கம் அசாம், புதுச்சேரி ஆகியவற்றிற்கான சட்டசபை தேர்தல் கடந்த மாதம் நடந்தது. இந்த நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் வெளியானது. மேற்குவங்கம், அசாம், புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. தமிழகத்தில், த.வெ.க., 108 இடங்களை கைப்பற்றியுள்ளது.கேரளத்தில், காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: ஜனநாயகத் திருவிழாவில் வெற்றி பெற்றவர்கள், தங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய மக்கள் மீது மிகுந்த பொறுப்புணர்வுடனும், அர்ப்பணிப்புடனும், இந்த வெற்றியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இது ஜனநாயகத்தின் இயல்பான நடைமுறை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சுயபரிசோதனை செய்து கொள்வதற்கும், ஆட்சி அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு மக்களுக்கு சேவை செய்வதற்கான வழிகளை கண்டறிவதற்கான நேரம். இந்த மாநில மக்களின் கனவுகளும் லட்சியங்களும் நிறைவேற வேண்டும். வாழ்த்துக்கள். வணக்கம். இவ்வாறு, சத்குரு பதிவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us