தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இளம் தலைமுறையினர் கேள்விக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்; மோகன் பாகவத்

இளம் தலைமுறையினர் கேள்விக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்; மோகன் பாகவத்

இளம் தலைமுறையினர் கேள்விக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்; மோகன் பாகவத்

3


ADDED : ஜூலை 25, 2026 11:12 AM

Follow on GoogleFavourite on Google

3

ADDED : ஜூலை 25, 2026 11:12 AM


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ''இளம் தலைமுறை கேள்விகளை கேட்கிறது. நாம் அவர்களுக்கு அதற்கான காரணத்தை விளக்க வேண்டும்'' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தி உள்ளார்.

டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பேசியதாவது: நாங்கள் இளைஞர்களாக இருநத காலத்தில் அது கீழ்ப்படிதலின் காலமாக இருந்தது. இப்போதெல்லாம் அப்படி இல்லை. புதிய இளம் தலை முறையினர் கேள்வி கேட்கிறது.

இளம் தலைமுறை கேள்விகளை கேட்கிறது. நாம் அவர்களுக்கு அதற்கான காரணத்தை விளக்க வேண்டும். நாம் அவர்கள் மீது மிகுந்த பாசம் காட்ட வேண்டும். அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும்.

அவர்களுடன் உரையாட வேண்டும். இப்போதெல்லாம் குடும்பங்களுக்குள்ளேயே கூட உரையாடல் நின்றுவிட்டது. குழந்தைகள் அறிவுறுத்தல்களை விட நடத்தை மூலமே அதிகம் கற்றுக்கொள்கிறார்கள்.

இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் அளிக்க வேண்டும். குழந்தைகள் தங்கள் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். முன்மாதிரியாக திகழ வேண்டும். இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us