ADDED : மார் 02, 2025 04:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'உள்துறை அமைச்சர் அமித் ஷா, கோவை வந்தது, தமிழக அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும்' என, சொல்லப்படுகிறது. தமிழக உளவுத்துறை அதிகாரிகள் அமித் ஷாவை சந்தித்தனர்.
அப்போது, 'தமிழகத்தின் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது' என, கூறியதுடன், அது குறித்த விபரங்களையும் தெரிவித்துள்ளனர். 'சீமானுக்கு மத்திய அரசின் பாதுகாப்பு தேவை' எனவும் கூறினராம். அமித் ஷா உடனே, 'இதுகுறித்த கோப்புகளை எனக்கு விரைவாக அனுப்புங்கள்' என, உத்தரவிட்டாராம்.
விரைவில், சீமானுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாம். ஏற்கனவே, தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்கி உள்ளது. சீமானுக்கும் வழங்கப்பட்டால், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.