sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

முதியோர் உதவித்தொகை 80,000 பேர் காத்திருப்பு

/

முதியோர் உதவித்தொகை 80,000 பேர் காத்திருப்பு

முதியோர் உதவித்தொகை 80,000 பேர் காத்திருப்பு

முதியோர் உதவித்தொகை 80,000 பேர் காத்திருப்பு


UPDATED : ஆக 10, 2024 03:28 AM

ADDED : ஆக 10, 2024 12:50 AM

Google News

UPDATED : ஆக 10, 2024 03:28 AM ADDED : ஆக 10, 2024 12:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதியோர் ஓய்வூதியத் தொகை பெறுவதற்காக, தமிழகம் முழுதும், 80,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து, பல மாதங்களாக அரசு உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.

தமிழக அரசு, சமுதாயத்தில் நலிவடைந்த மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்த பெண்கள், விவசாய தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், 50 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருமணமாகாத ஏழை பெண்கள் ஆகியோருக்கு, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்குகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு 2023 ஜனவரி 1 முதல் மாதாந்திர ஓய்வூதியமாக, 1,500 ரூபாய்; மற்ற திட்டங்களில் பயன்பெறுவோருக்கு மாதாந்திர ஓய்வூதியமாக, 2023 ஆகஸ்ட் முதல் 1,200 ரூபாய் வழங்கப்படுகிறது.

முதியோர் உதவித்தொகை பெற, ஆதரவற்றவராகவும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவராகவும், வயது 60க்கு மேலும் இருக்க வேண்டும். இத்தொகை பெறுவதற்காக, ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களிலும் நுாற்றுக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை, 90,000 பேர் விண்ணப்பித்திருப்பதாக தெரிகிறது.

வருவாய்த்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:


முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், 34.05 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கடந்த மூன்று ஆண்டுகளில், 85,000 பேருக்கு முதியோர் உதவித்தொகை கூடுதலாக வழங்கப்படுகிறது. ஓய்வூதியம் வழங்குவதற்காக, நடப்பாண்டு தமிழக அரசு, 5,337 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.

இந்த ஆண்டு புதிதாக 80,000 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என, சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இன்னமும் அரசாணை எதுவும் வெளியிடப்படவில்லை. அரசு அனுமதி அளித்தால், விண்ணப்பித்து காத்திருப்போருக்கு விரைவில் ஓய்வூதியம் கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us