தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/லோக்சபா இணையதளத்தில் எதிர்க்கட்சிகள் குறித்த தகவல்களில் குளறுபடி!

லோக்சபா இணையதளத்தில் எதிர்க்கட்சிகள் குறித்த தகவல்களில் குளறுபடி!

லோக்சபா இணையதளத்தில் எதிர்க்கட்சிகள் குறித்த தகவல்களில் குளறுபடி!


UPDATED : ஜூன் 18, 2024 03:42 AM

ADDED : ஜூன் 18, 2024 02:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 18, 2024 03:42 AM ADDED : ஜூன் 18, 2024 02:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லோக்சபா இணையதளத்தில் எதிர்க்கட்சிகள் குறித்த தகவல்களில் பல குளறுபடிகள் உள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் முடிந்த உடன், அதன் அறிக்கைகளை, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தேர்தல் கமிஷன் ஒப்படைத்துள்ளது. இதையடுத்து, தேர்தல் கமிஷன் வழங்கியுள்ள தகவல்களின் அடிப்படையில் லோக்சபா இணையதளத்தில் பதிவிட வேண்டும்.

எதிர்க்கட்சி விபரங்கள்


அந்த இணையதளத்தில், பா.ஜ.,வின், 240 எம்.பி.,க்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. லோக்சபாவின் மொத்த இடங்களில், 45.03 சதவீத இடத்தை பா.ஜ., பிடித்து உள்ளது.

அதன் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம், 16 இடங்களுடன் 3 சதவீத இடத்தைப் பிடித்துள்ளது. மற்றொரு முக்கிய கூட்டணியான ஐக்கிய ஜனதா தளம், 12 இடங்களுடன் 2.25 சதவீத இடத்தைப் பிடித்துள்ளது.

அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் குறித்த தகவல்களில் குளறுபடி செய்யப்பட்டுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், 99 இடங்களில் வென்றதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

ஆனால், லோக்சபா இணையதளத்தில், 96 இடங்களில் வென்றதாகவும், மொத்த இடங்களில் 18.01 சதவீதம் பெற்றுஉள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் முன்னாள் தலைவர் ராகுல், கேரளாவின் வயநாடு மற்றும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இணையதளத்தில் அவர் வயநாடு எம்.பி., என்று காட்டப்பட்டு உள்ளது.

இதைத் தவிர, இளம் பழங்குடியின பெண் எம்.பி.,யான, சிக்கோடியில் இருந்து வென்ற பிரியங்கா ஜர்க்கிஹோலி மற்றும் தெற்கு மால்டாவில் இருந்து வென்ற இஷா கான் சாதுரியின் பெயர்கள், பட்டியலில் இடம்பெறவில்லை.

தேர்தல் கமிஷன்


திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி, டயமண்ட் ஹார்பர் தொகுதியில் இருந்து ஏழு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். அவருடைய பெயரும் பட்டியலில் இல்லை. அதுபோல திரிணமுல் காங்.,கின் கூச் பெஹர் எம்.பி.,யான ஜகதீஷ் சந்திர பர்மாவின் பெயரும் காணவில்லை.

மற்றொரு எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி மூன்று இடங்களில் வென்றதாக தேர்தல் கமிஷன் கூறுகிறது. ஆனால், லோக்சபா இணையதளம், இரண்டில் வென்றதாக கூறுகிறது. பஞ்சாபின் சங்ரூர் எம்.பி., யான குர்மீத் சிங் மீட் ஹேயரின் பெயர் விடுபட்டுள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us