தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ அ.தி.மு.க., பட்டுவாடா: தே.மு.தி.க., ஆதங்கம்

அ.தி.மு.க., பட்டுவாடா: தே.மு.தி.க., ஆதங்கம்

அ.தி.மு.க., பட்டுவாடா: தே.மு.தி.க., ஆதங்கம்


UPDATED : ஏப் 04, 2024 03:17 AM

ADDED : ஏப் 03, 2024 11:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 04, 2024 03:17 AM ADDED : ஏப் 03, 2024 11:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுாரில் அ.தி.மு.க., நிர்வாகிகள் மூலம் பட்டுவாடா நடப்பதால், தே.மு.தி.க., நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடலுார் தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். மனுதாக்கல் நிறைவடைந்த நிலையில் நகர, கிராமங்களில் சின்னங்கள் வரையும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு, கூட்டணி கட்சியினர் வீடு தேடி சென்று ஆதரவு திரட்டும் பணிகள் நடந்தது. தற்போது, வேட்பாளர் சிவக்கொழுந்து அந்தந்த பகுதிகளில் உள்ள நிர்வாகிகளுடன் ஓட்டு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில், பூத் ஏஜன்டுகள், வட்ட, கிளை நிர்வாகிகளுக்கு பட்டுவாடா பணிகள் நடக்கிறது. இப்பணிகள் அ.தி.மு.க., நிர்வாகிகள் மூலம் அனைத்து தொகுதிகளிலும் நடப்பதால், தே.மு.தி.க.,வினர் அதிருப்தியடைந்தனர். தமது கட்சி வேட்பாளர் போட்டியிடும் நிலையில், பட்டுவாடா பணிகளை நம்மிடம் தரவில்லையே என தே.மு.தி.க.,வினர் ஆதங்கத்தில் உள்ளனர்

- நமது நிருபர் -.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us