sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

பெங்களூரு குண்டு வெடிப்பு குற்றவாளிகள் சத்தியமங்கலத்தில் நடத்திய ரகசிய கூட்டம்

/

பெங்களூரு குண்டு வெடிப்பு குற்றவாளிகள் சத்தியமங்கலத்தில் நடத்திய ரகசிய கூட்டம்

பெங்களூரு குண்டு வெடிப்பு குற்றவாளிகள் சத்தியமங்கலத்தில் நடத்திய ரகசிய கூட்டம்

பெங்களூரு குண்டு வெடிப்பு குற்றவாளிகள் சத்தியமங்கலத்தில் நடத்திய ரகசிய கூட்டம்

2


ADDED : மார் 29, 2024 06:44 AM

Google News

ADDED : மார் 29, 2024 06:44 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு, 'ராமேஸ்வரம் கபே' ஹோட்டலில் குண்டு வெடிப்பை நிகழ்த்திய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களின் மொபைல் போன்களை ஆய்வு செய்ததில், அவர்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில், ரகசிய கூட்டம் நடத்தியது தெரிய வந்துள்ளது.

பெங்களூரு மாரத்தஹள்ளி புருக்பீல்டில் உள்ள 'ராமேஸ்வரம் கபே' ஹோட்டலில், கடந்த 1ம் தேதி பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. ஹோட்டல் பணியாளர்கள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், தொப்பி அணிந்த நபர், குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.

அடைக்கலம்


குண்டுவெடிப்பு குற்றவாளிகளாக, கர்நாடக மாநிலம், ஷிமோகா மாவட்டத்தைச் சேர்ந்த முஸவீர் ஷாகிப் ஹுசைன், அப்துல் மதின் தாஹா என, அடையாளம் கண்டு உள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடிவருகின்றனர்.

இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பாக, சென்னை மண்ணடி அருகே முத்தையால்பேட்டையை சேர்ந்த அபுதாஹிர், ராயப்பேட்டை பி.வி.கோவில் தெருவைச் சேர்ந்த லியாகத் அலி, வண்ணாரப்பேட்டை ரஹீம், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா முகமது, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷேக் தாவூத், அவரது தந்தை அன்பு பக்ருதீன் உள்ளிட்டோரின் வீடுகளில் நேற்று முன்தினம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அவர்களிடம் இருந்த மொபைல் போன் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது, பெங்களுரு குண்டு வெடிப்பு குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தோர், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில், ரகசிய கூட்டம் நடத்தியது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது: பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஹோட்டலில் குண்டு வைத்தவர்கள் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் எல்லாரையும் அடையாளம் கண்டுள்ளோம். குண்டுவெடிப்பு குற்றவாளிகள், சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தனியார் விடுதியில் தங்கித் தான் சதித் திட்டம் தீட்டி உள்ளனர். இந்த இடத்திற்கு பல முறை வந்துள்ளனர்.

தொடர் குண்டுவெடிப்பு


இவர்களுக்கும், கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2022 அக்.,23ல், கார் குண்டுவெடிப்பு நடத்தி பலியான ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபினுக்கும் தொடர்பு உள்ளது.

ஜமேஷா முபின் தலைமையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில், ரகசிய கூட்டம் நடத்தி உள்ளனர். வெடிகுண்டு தயாரிப்பு, ஆயுதப் பயிற்சி குறித்தும் விவாதித்து உள்ளனர்.

இவர்களுக்கு தலைவனாக, இலங்கையில், 2019ல், ஈஸ்டர் அன்று தொடர் குண்டுவெடிப்பு நடத்தி, 270 பேரை கொன்ற சஹ்ரான் ஹாசிம் செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

சஹ்ரான் ஹாசிம் குண்டு வெடிப்பு நடத்தி பலியாவதற்கு முன், சென்னைக்கு பல முறை வந்துள்ளார். அவர் நடத்திய ரகசிய கூட்டத்தில் பங்கேற்ற நபர்கள் தான், கோவையிலும், பெங்களூரிலும் குண்டு வெடிப்பு நிகழ்த்தி உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

28 நாட்களுக்கு பின் ஒருவர் கைது

'ராமேஸ்வரம் கபே' ஹோட்டலில் குண்டுவெடித்த வழக்கில், 28 நாட்களுக்குப் பின் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து என்.ஐ.ஏ., வெளியிட்ட அறிக்கை: குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, கர்நாடகாவின் 12 இடங்கள், தமிழகத்தின் 5 இடங்கள், உத்தர பிரதேசத்தின் ஒரு இடத்தில் என்.ஐ.ஏ., சோதனை நடத்தப்பட்டது. விசாரணை அடிப்படையில், முஸவீர் ஷாகிப் ஹுசைன் குண்டுவைத்ததும், அப்துல் மதின் தாஹா உடந்தையாக இருந்ததும் தெரிந்தது.
இவர்கள் இருவருக்கும் உதவி செய்ததாக, பெங்களூரின் முஜாமில் ஷரீப் என்பவர், கைது செய்யப்பட்டு உள்ளார். மூன்று பேரின் வீடுகளில் நடத்திய சோதனையில், டிஜிட்டல் உபகரணங்கள், பணம் கிடைத்து உள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us