UPDATED : மார் 02, 2025 10:28 AM
ADDED : மார் 02, 2025 05:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அரக்கோணத்தில் உள்ள, மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆள்சேர்ப்பு பயிற்சி மையத்திற்கு, ராஜாதித்ய சோழன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அதாவது, சி.ஐ.எஸ்.எப்., - ஆர்.டி.சி., என்று அழைக்கப்பட்டது, இனி, ராஜாதித்ய சோழன் ஆர்.டி.சி., தக்கோலம் என அழைக்கப்படும். முதலாம் பராந்தகனின் மகனான சோழ இளவரசன் ராஜாதித்ய சோழன், 948 - 949ம் ஆண்டு நடந்த தக்கோலம் போரில், சோழப்படைகளுக்கு தலைமை தாங்கினார். இப்போரில், அவர் இறந்ததுடன், அவரது படை தோற்கடிக்கப்பட்டது.
ராஜாதித்ய சோழன் ஆர்.டி.சி., தக்கோலத்தின் புதிய அலுவலக முகவரி, 'துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகம், ராஜாதித்ய சோழன் ஆர்.டி.சி., தக்கோலம் அஞ்சல் அலுவலகம், சுரஷா வளாகம், அரக்கோணம் தாலுகா, ராணிப்பேட்டை மாவட்டம் - 631152' என அறிவிக்கப்பட்டு உள்ளது.