ADDED : செப் 15, 2024 12:38 AM

புதுடில்லி: 'திராவிட மாடலை பின்பற்றுகிறோம்' என, தமிழக அரசு கூறினாலும், பதவியேற்பு விழா உட்பல பல அரசு நிகழ்ச்சிகள் எதுவுமே ராகு காலத்தில் நடப்பதில்லை; நல்ல முகூர்த்த நேரத்தில் தான் நடைபெறுகின்றன.
டில்லியிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதாம். பார்லிமென்டில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், அலுவலக பணிகளுக்காக தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதிய பார்லிமென்ட் கட்டடம் திறந்த பின், அரசியல் கட்சிகளின் பார்லிமென்ட் அலுவலகங்கள் புதிய கட்டடத்திற்கு மாற வேண்டும்.
ஆனால், தி.மு.க.,வோ பழைய பார்லிமென்ட் கட்டடத்தில் உள்ள அலுவலகத்திலேயே செயல்பட விரும்புகிறதாம்.
இது தொடர்பாக, சபாநாயகருக்கு தி.மு.க., கடிதம் எழுதி உள்ளதாக சொல்லப்படுகிறது.
'கடந்த, 40 ஆண்டுகளுக்கும் மேலாக பழைய பார்லிமென்ட் கட்டடத்தில் தி.மு.க., அலுவலகம் உள்ளது; மிகவும் ராசியான இடம். கட்சி, பல ஏற்ற இறக்கங்களை கண்டுள்ளது. புதிய கட்டடம் வேண்டாம். இந்த பழைய இடமே போதும்' என்கிறதாம் தி.மு.க.,
இதையடுத்து, 'மாநில கட்சிகள் பழைய பார்லிமென்டிலேயே தங்கள் அலுவலகங்களை தொடர்ந்து வைத்திருக்கலாம்' என சொல்லி விட்டாரம், சபாநாயகர் ஓம் பிர்லா.
ஆனால் பா.ஜ.,வும், தெலுங்கு தேசமும் தங்களுக்கு பழைய பார்லிமென்ட், புதிய பார்லிமென்ட் என இரண்டு கட்டடங்களிலும் அலுவலகம் வேண்டும் என, சபாநாயகரிடம் கேட்டுள்ளன.