ADDED : செப் 15, 2024 03:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மத்திய அமைச்சர் ஒருவர், தமிழகத்திற்கு வந்திருந்தார்; பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அந்த அமைச்சர் என்ன நேரத்தில், எந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என, அனைத்து விபரங்களையும் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு கட்சி தலைமை அனுப்பி வைத்தது.
அந்த அமைச்சர், திடீரென ஒரு சில மணித்துளிகள் காணாமல் போனார். அவர் எங்கே போனார்; யாரை சந்தித்தார் என பா.ஜ.,வினர், போலீஸ் உட்பட யாருக்குமே தெரியவில்லையாம்.
ஒரு வேளை, கூட்டணி தொடர்பாக யாரையாவது அந்த அமைச்சர் சந்தித்தாரா அல்லது நண்பர்கள், உறவினர்கள் யாரையாவது சென்று பார்த்தாரா? 'அப்படி என்ன ரகசிய சந்திப்பு' என பா.ஜ.,வினர் குழம்பியுள்ளனர்.