sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

டில்லி உஷ்ஷ்ஷ்: ராகுலின் ஓட்டு வங்கி அரசியல்!

/

டில்லி உஷ்ஷ்ஷ்: ராகுலின் ஓட்டு வங்கி அரசியல்!

டில்லி உஷ்ஷ்ஷ்: ராகுலின் ஓட்டு வங்கி அரசியல்!

டில்லி உஷ்ஷ்ஷ்: ராகுலின் ஓட்டு வங்கி அரசியல்!

9


ADDED : செப் 15, 2024 03:27 AM

Google News

ADDED : செப் 15, 2024 03:27 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: எதிர்க்கட்சி தலைவர் ராகுல் சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அமெரிக்க எம்.பி., ஒருவரை சந்தித்தார். இது, இந்திய அரசியலில் பெரும் பிரச்னையை கிளப்பி விட்டது.

இல்ஹான் ஓமர் என்கிற அந்த பெண் எம்.பி., இந்தியாவை கடுமையாக எதிர்ப்பவர்; தீவிர பாகிஸ்தான் ஆதரவாளர்.

காஷ்மீரில் அரசியல் சாசன சட்டம், 370ஐ மோடி அரசு நீக்கிய போது, அமெரிக்க பார்லிமென்டில் இந்தியாவிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார் இந்த ஓமர். 2022ல் பாகிஸ்தான் சென்று, அப்போதைய பிரதமர் இம்ரான் கானை சந்தித்தார்; பின், பாகிஸ்தான் அபகரித்த காஷ்மீருக்கும் சென்றார். அப்போது இந்தியா இதை கடுமையாக கண்டித்தது

அமெரிக்க பார்லிமென்டில், பிரதமர் மோடி 2023 ஜூனில் உரையாற்றினார்; அதைப் புறக்கணித்தவர் ஓமர்.

'இப்படி இந்தியாவிற்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் உள்ள ஒரு அமெரிக்க எம்.பி.,யை ராகுல் எதற்கு சந்திக்க வேண்டும்?' என, கடுமையான விமர்சிக்கப்பட்டது.

'ராகுல் - -ஓமர் சந்திப்பிற்கு ஒரு காரணம் உள்ளது' என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.

ஜம்மு - -காஷ்மீரில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இங்கு, பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியுடன், காங்., கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

'இந்த சமயத்தில் அமெரிக்க எம்.பி., ஓமரை, ராகுல் சந்தித்தது ஓட்டு வங்கி அரசியல்; எப்படியாவது ஜெயிக்க வேண்டும். அதற்கு எதையும் செய்வார் ராகுல்' என, விமர்சிக்கின்றனர் பா.ஜ.,வினர்.






      Dinamalar
      Follow us