UPDATED : மே 26, 2024 08:31 AM
ADDED : மே 26, 2024 04:42 AM

ஜூன் 4ம் தேதி மதியமே, யார் மத்தியில் ஆட்சி அமைப்பர் என்பது தெரிந்துவிடும். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பதவி ஏற்பு விழாவிற்கு பா.ஜ., நாள் குறித்துவிட்டதாம்.
ஜூன் 10ல், மோடி பிரதமராக பதவியேற்கும் விழா நடைபெற உள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்களில் கிசு கிசுக்கப்படுகிறது. 2014ல் மோடி முதன் முறையாக பிரதமராக பதவியேற்ற போது சார்க் நாடுகளின் தலைவர்கள் விழாவில் பங்கேற்றனர்.
அதே போல இந்த முறை பதவியேற்பு விழாவிற்கு 'ஜி- - 20' அமைப்பு தலைவர்கள் சிலரை அழைத்து உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த தயாராக உள்ளாராம் மோடி. இதற்கிடையே, ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு முதல்வராவார் என சொல்லப்படுகிறது. அவர் பதவியேற்பு விழாவிலும் மோடி பங்கேற்கவிருக்கிறாராம்.
இதையடுத்து மூன்று நாடுகளுக்கு பயணம் செய்யஇருக்கிறாராம் மோடி. இப்படி தேர்தல் முடிவுகளுக்கு முன்பாகவே தன் அட்டவணையைத் தயார் செய்துவிட்டாராம் மோடி.