தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ டில்லி உஷ்ஷ்ஷ்: மாதாஜி இல்லை

டில்லி உஷ்ஷ்ஷ்: மாதாஜி இல்லை

டில்லி உஷ்ஷ்ஷ்: மாதாஜி இல்லை


ADDED : ஜூலை 28, 2024 12:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2024 12:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: பார்லிமென்டில் இப்போது எதிர்க்கட்சிகள் அடிக்கடி தர்ணா, கூச்சல், கோஷம் என குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த சமயத்திலும் சில சுவாரசியமான விஷயங்களும் நடக்கின்றன. இந்த சந்தர்ப்பங்கள் படு சூடாக இருக்கும் எம்.பி.,க்களைக்கூட சிரிக்க வைத்துவிடுகின்றன.

இப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்தது. மத்திய அரசின் பட்ஜெட் மீது தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது. ராஜ்யசபாவில் நடைபெற்ற விவாதத்தில் காங்கிரசின் தேசிய தலைவரும், சபையின் எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பேசிக்கொண்டிருந்தார்.

கடுமையாக விமர்சித்த இவர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைப் பார்த்து, 'மாதாஜி, கருணை காட்டுங்கள்' என, ஹிந்தியில் கூறினார்.

துணை ஜனாதிபதியும், சபையின் தலைவருமான ஜக்தீப் தன்கர், உடனே கார்கேவைப் பார்த்து. 'கார்கேஜி, நிர்மலா உங்கள் மாதாஜி இல்லை. உங்கள் மகள் மாதிரி' என்றார். 82 வயதாகும் கார்கே எப்படி 64 வயதாகும் நிதி அமைச்சரை மாதாஜி என அழைக்க முடியும் என்பது சபை தலைவரின் வாதம்.

நிர்மலா எழுந்து நின்று சபை தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கை கூப்பினார். சபையில் ஒரே சிரிப்பலை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us