sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

தடையை மீறி படம் பிடித்தது 'ட்ரோன்': கேள்விக்குறியானது ஏர்போர்ட் பாதுகாப்பு

/

தடையை மீறி படம் பிடித்தது 'ட்ரோன்': கேள்விக்குறியானது ஏர்போர்ட் பாதுகாப்பு

தடையை மீறி படம் பிடித்தது 'ட்ரோன்': கேள்விக்குறியானது ஏர்போர்ட் பாதுகாப்பு

தடையை மீறி படம் பிடித்தது 'ட்ரோன்': கேள்விக்குறியானது ஏர்போர்ட் பாதுகாப்பு

2


UPDATED : ஆக 18, 2024 02:31 AM

ADDED : ஆக 18, 2024 12:52 AM

Google News

UPDATED : ஆக 18, 2024 02:31 AM ADDED : ஆக 18, 2024 12:52 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை விமான நிலையத்தில், 'ட்ரோன் கேமரா' வாயிலாக படம் பிடிக்கப்பட்டது, பாதுகாப்பு நடவடிக்கைகளை கேள்விக்குறியாக்கி உள்ளது.

சர்வதேச எல்லை, விமான நிலையம், தலைமை செயலகம் போன்ற மிக முக்கிய பகுதிகளில், 'ட்ரோன்' பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

சென்னை விமான நிலையத்தில், சுதந்திர தினத்தை ஒட்டி, 8ம் தேதி துவங்கிய ஏழு அடுக்கு பாதுகாப்பு, வரும் 20ம் தேதி வரை அமலில் உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம், 'இன்ஸ்டாகிராம்' வலைதள பதிவு ஒன்றில், சுதந்திர தின, 'ட்ரோன்' காட்சி வெளியானது. அதில், சென்னை ரிப்பன் மாளிகை, நந்தனம் மெட்ரோ ரயில் தமைமையிடம், சென்னை விமான நிலையம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக, அதிக பாதுகாப்பு மற்றும் தடை செய்யப்பட்ட பகுதியான, சென்னை விமான நிலைய முனையங்கள், ஓடுபாதையில் விமானம் நிற்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. விமான நிலையத்தை சுற்றி, 5 கி.மீ., வரை, 'ட்ரோன்' பறக்க அனுமதி கிடையாது.

ஆனால், விமான நிலையத்தின் எதிர்புறத்தில் இருந்து படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில், பயங்கரவாத இயக்கத்திற்கு தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

எந்த விமான நிலையத்திலும், ட்ரோன் வாயிலாக காட்சிகளை பதிவு செய்ய அனுமதி கிடையாது. சென்னை விமான நிலையத்தில், ட்ரோன் வீடியோ பதிவு செய்தது குறித்து, விமான போக்குவரத்து இயக்குனரகத்திடம் புகார் அளிக்கப்படும். விசாரணைக்கு பின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விமான நிலையத்தை வீடியோ எடுத்த நபர் கூறியதாவது:

சென்னையை பெருமைப்படுத்தும் விதமாக, முக்கிய இடங்களை படம் எடுத்து வீடியோவாக, சமூக வலைதளத்தில் பதிவேற்றினேன். சுதந்திர தினத்தில் பெண்களுக்கு சுதந்திரம் இருக்கிறது என்ற காரணத்தால், பெருமையாக வீடியோவை பதிவேற்றினேன்.

ஆனால், மேற்கு வங்கம் மாநிலம் கோல்கட்டாவில் பெண் டாக்டருக்கு நடந்த கோர சம்பவம் என்னை உலுக்கியது; இதனால், சுதந்திர தின நாளில் பதிவேற்றம் செய்த வீடியோவை அழித்து விட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சாதகமாக அமையும்.

- மத்திய உளவுத்துறை அதிகாரி



லைசென்ஸ் கட்டாயம்

'ட்ரோன்' வல்லுனர்கள் கூறியதாவது: ட்ரோன் இயக்குபவர், மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் கீழ் இயங்கும், 'ரிமோட் பைலட் டிரெய்னிங்' நிறுவனத்திடம் பயிற்சி பெற்று, 'ட்ரோன் பைலட் லைசென்ஸ்' பெற வேண்டும். பயிற்சியில், ட்ரோன் எங்கு இயக்குவது, இயக்கக்கூடாது என்ற விபரம் தெரிவிக்கப்படும். அதிக பாதுகாப்பு உள்ள பகுதிகளில் ட்ரோன் பறக்க தடை உள்ளது. விதியை மீறி செயல்பட்டால், லைசென்ஸ் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.








      Dinamalar
      Follow us