sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

'குட்கா' வியாபாரிகள் போலீசிடம் தஞ்சம்! ஜி.எஸ்.டி., ஆபீசர் வாரிச் சுருட்டிய 'லஞ்சம்'

/

'குட்கா' வியாபாரிகள் போலீசிடம் தஞ்சம்! ஜி.எஸ்.டி., ஆபீசர் வாரிச் சுருட்டிய 'லஞ்சம்'

'குட்கா' வியாபாரிகள் போலீசிடம் தஞ்சம்! ஜி.எஸ்.டி., ஆபீசர் வாரிச் சுருட்டிய 'லஞ்சம்'

'குட்கா' வியாபாரிகள் போலீசிடம் தஞ்சம்! ஜி.எஸ்.டி., ஆபீசர் வாரிச் சுருட்டிய 'லஞ்சம்'

1


UPDATED : மே 28, 2024 06:09 AM

ADDED : மே 28, 2024 12:46 AM

Google News

UPDATED : மே 28, 2024 06:09 AM ADDED : மே 28, 2024 12:46 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் ஈஸ்வரன் கோவில் தேர்த்திரு விழாவுக்கு சென்றனர் சித்ராவும், மித்ராவும். ''அப்பப்பா... என்ன கூட்டம் பாருங்க; இப்பெல்லாம் கோவில் விழாக்கள்ல, பக்தர்கள் கூட்டம் அலைமோதுதுங்க அக்கா'' என, மெய் சிலிர்த்தாள் மித்ரா.

''உண்மை தான் மித்து. கொரோனாவுக்கு அப்புறமா, எல்லா கோவில்கள்லயும் நெறைய கூட்டம்; நல்லதுதானே,'' என்ற சித்ரா, ''நாம பேசற விஷயத்தை, சம்மந்தப்பட்ட துறைய கவனிக்கிற ஆபீசர்ங்க 'பாலோ' பண்றாங்க மித்து,'' என சித்ரா ஆரம்பித்தாள்.

''அவிநாசியில இருக்கற, 11 'டாஸ்மாக்' மதுக்கடை 'பார்'கள்ல, அஞ்சு 'பார்'காரங்க தான், மாசா மாசம் 'கவர்ன்மென்டு'க்கு பணம் கட்டி, 'லைசென்ஸ்' வாங்கி செயல்படறாங்க. மத்தவங்க எல்லாம், 'லைசென்ஸ்' இல்லாம, 'இல்லீகலா' பார் நடத்தறாங்கன்னு, போன வாரம் பேசினோம்ல. இது, சம்மந்தம்மா அதிகாரிங்க விசாரணை செஞ்சு, 'இல்லீகல்' பார் களுக்கு 'சீல்' வச்சிட்டாங்களாம்,''

''இந்த விவகாரத்துல வேற ஒரு அரசியலும் இருக்காம்; 'பார்' கமிஷனுக்காக, ஆளுங்கட்சி நிர்வாகிங்க கடைகளை 'பங்கு' போட்டு நடத்திட்டு இருக்காங்க. 'லீவு' நாள்லயும் 'டாஸ்மாக்' கடை 'பார்'கள்ல சரக்கு விக்கிறாங்களாம்,''

பலமான கூட்டணி


''ஒரு நிர்வாகியோட பொறுப்புல இருக்கற 'பார்'கள்ல மட்டும், லீவு நாள்ல சரக்க விக்கறதுக்கு அனுமதிக்கலையாம்; போலீஸ்காரங்க ரொம்ப 'ஸ்டிரிக்ட்' பண்றாங்கலாம். இந்த கடுப்புல தான், மத்த நிர்வாகிகளோட பொறுப்புல இருக்கற கடைகளுக்கு சிக்கல் தர்ற மாதிரியான வேலைகளை அவர் செய்துட்டு இருக்கார்ன்னு பேசிக்கிறாங்க,'' என ரகசியம் உடைத்தாள் சித்ரா.

''கல்லா கட்டுறதுல மல்லுக்கட்டுன்னு சொல்லுங்க; நான் என்னவோ, கட்சிக்காரங்க எல்லாம் திருந்திட்டாங்களோன்னு நினைச்சுட்டேன்'' என சிரித்த மித்ரா, ''அதே ஸ்டேஷன்ல வேல செய்ற ஒரு சின்ன ஆபீசரோட சொந்தக்காரர், கருவலுாருக்கு பக்கத்தில உள்ள கிராமத்தில நடத்தற மளிகைக்கடையில, 'குட்கா' தாராளமா கிடைக்குதாம். போலீஸ்காரங்க யாராவது போய் பிடிச்சாங்கன்னா, 'ரெக்கமண்ட்' பண்ணி, 'நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம்'ன்னு சொல்றாராம்,'' என்றாள் மித்ரா.

''வேலியே பயிரை மேயுற கதையால்ல இருக்கு. எல்லாம் அந்த 'கோவிந்தராஜனுக்கு' தான் வெளிச்சம்,'' என்ற சித்ரா, ''லிங்கேஸ்வரர் ஊரிலுள்ள பேரூராட்சியில துாய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்ய, 7 லட்சம் ரூபாய் 'பிக்ஸ்' பண்ணி வச்சிருக்காங்களாம். ஆபீசர் துவங்கி ஆளுங்கட்சி, அவங்க கூட்டணி, எதிர்க்கட்சி வரை, கட்சி பாகுபாடில்லாம, பலமான கூட்டணி அமைச்சு, 'கல்லா' கட்ட 'ரெடி'யாகிட்டாங்களாம்'' என பேரூராட்சி விவகாரத்தை பகிர்ந்தாள்.

இப்படியுமா தண்டிப்பது!


''நேர்மையா உழைச்சு சம்பாதிக்கிற பணமே நிக்க மாட்டேங்குது; இந்த மாதிரி யெல்லாம் சம்பாதிச்சு என்ன பண்ற போறாங்களோ'' என 'உச்' கொட்டிய மித்ரா, ''நல்லுாருக்கும், வடக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கும் எல்லையா இருக்கற இடத்துல, ரெண்டு 'டாஸ்மாக்' கடைகள் இருக்காம். கடைல இருந்து வெறும், 100 மீ., துாரத்துக்குள்ள ரோட்ல நின்னுக்கிட்டு, சில போலீஸ்காரங்க, 'செக்கிங்'ற பேர்ல, வசூல் அள்றாங்களாம். அவங்ககிட்ட இ-சலான் கூட இல்லையாம்க்கா,'' என மித்ரா அங்கலாய்த்தாள்.

''போலீஸ்காரங்களுக்குவார லீவு கொடுக்கணும்ன்னு, அரசாங்கம் உத்தரவு போட்டும், சிட்டில வேல செய்ற போலீஸ் காரங்களுக்கு 'லீவு' தர்றதே இல்லையாம்க்கா,'' என்ற மித்ரா, ''ஆனா, லீவு தர்ற மாதிரி, கணக்கு காமிச்சிடறாங்களாம்,''

''அதையும் தாண்டி, ரொம்ப அவசர தேவைக்கு 'லீவு' எடுத்துட்டு, திரும்பவும் வந்தால், 2, 3 நாள் 'ஆப்சென்ட்' போட்டர்றாங்களாம். அதுமட்டுமில்லாம, பூட்டின 'செக்போஸ்ட்'ல டூயிட்டி போட்டு, 'டார்ச்சர்' தர்றாங்களாம். ஆனா, பெரிய ஆபீசர்களுக்கு எடுபிடி வேலை பார்த்துட்டு, அவங்களோட 'கைப்புள்ளை'யா இருக்கற போலீஸ்காரங்களுக்கு, எந்தவொரு நெருடிக்கடியும் கொடுக்காம 'லீவு' கொடுத்திடறாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''இப்படி டென்ஷன் கொடுத்தா, போலீஸ்காரங்க எப்படி தான் வேல செய்வாங்க...'' என, அங்கலாய்த்த மித்ரா, ''நானும் ஒரு போலீஸ் மேட்டர் சொல்றேன். வடக்கு பார்த்த ஸ்டேஷன்ல, டிராபிக் பார்க்குற ஒரு ஆபீசர், வாகன ஓட்டிகள்கிட்ட 'டெரர்' மாதிரி நடந்துக்கிறாராம். இத பத்தி சிலரு பெரிய ஆபீசர் கவனத்துக்கு புகாரா கொண்டு போயும் நடவடிக்கை இல்லையாம்,'' என்றாள்.

வசூல் ராஜாக்கள்!


''வசூல் பண்றதுல்ல, ஜி.எஸ்.டி.,யை கவனிக்கிற சில ஆபீசர்களும் பட்டைய கிளப்பறாங்களாம்'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.

''சில ஆபீசர்ஸ் ஜி.எஸ்.டி., சோதனைங்கற பேர்ல, வண்டிகளை மறிச்சு 'செக்' பண்றாங்களாம். 'சரியான விவரம் இல்லை; வரி ஏய்ப்பு பண்றீங்க', அப்படி, இப்படின்னு எதையாவது சொல்லி, வசூல் பண்றாங்களாம். கொஞ்ச நாள் முன்னாடி, 'டீ' சங்கத்துல முக்கியமான நிர்வாகியா இருக்கற ஒருத்தரோட கம்பெனி வண்டியையே மடக்கி, 'டாக்குமென்டை' யெல்லாம் 'செக்' பண்ணி பார்த்துட்டு, 'விதிமீறல் இருக்கு; 2 லட்சம் ரூபாய் அபராதம் கட்டணும்'ன்னு சொல்லியிருக்காங்க,''

''எல்லாம் சரியாத்தானே இருக்கு'ன்னு, கம்பெனிக்காரங்க சொல்ல, காதுலயே போட்டுக்கலையாம். கடைசியா, 50 ஆயிரம் ரூபாய் பேரம் பேசி வாங்கிட்டு, பாக்கெட்ல போட்டுட்டு, கிளம்பிட்டாங்களாம். 'ஆபீசர்ங்க ஆழம் தெரியாம காலை விட்டுட்டாங்க'ன்னு சொல்லி, இந்த விவகாரத்தை மினிஸ்டர் வரைக்கும் கொண்டு போயிட்டாங்களாம் சங்கத்துக்காரங்க,'' என்றாள் சித்ரா.

''இதே மாதிரி இன்னொரு பிரச்னையும் இருக்கு'' என தொடர்ந்த சித்ரா. ''இறக்குமதி சரக்குகளை ஏத்திட்டு வர்ற 'கன்டெய்னர்' லாரிங்க, விதிமீறி, இங்கிருந்து சரக்கு ஏத்திட்டு போறாங்கலாம். இதனால, 'எங்க தொழில் பாதிக்குது'ன்னு நம்ம ஊரு லாரி உரிமையாளர்கள் சொல்றாங்க. அப்படி சரக்கு எடுத்துட்டு போற லாரிகளை நிறுத்தி, டிரைவர்களோட வாக்குவாதமும் பண்ணியிருக்காங்க. இதுசம்மந்தமா, சுங்க வரித்துறை பெரிய ஆபிசரை சந்திச்சு புகாரும் சொல்லியிருக்காங்க; 'சரி பண்ணிடறோம்'ன்னு, அந்த ஆபிசர் நம்பிக்கை கொடுத்திருக்காராம்'' என்றாள்.

யார் தலை உருளுமோ!


''அவிநாசி ஒன்றியத்தில, வேட்டுவபாளையம் ஊராட்சியில, 32 லட்சம் ரூபாய் கையாடல் நடந்தது தொடர்பா சரியா தணிக்கை பண்ணல; தணிக்கை செய்யாம இருக்க லஞ்சமும் கொடுத்திருக்காங்க'ன்னு, ஊராட்சி மண்டல இணை இயக்குனருக்கு புகார் போயிடுச்சு. இது சம்மந்தமா, பி.டி.ஓ., 'என்கொயரி' பண்ணியிருக்கார். யாரு தலை உருள போகுதுன்னு தெரியல...'' என்றாள் மித்ரா.

''அக்கா, இதேபோல, திருப்பூர் நார்த் அப்புறம் ஊத்துக்குளி தாலுகா ஆபீசிலும், துணை ஆபீசர் அந்தஸ்துல வேல செய்ற ரெண்டு பேரு, பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கறாங்கன்னு, கலெக்டருக்கு சிலரு புகாரா எழுதியே கொடுத்திருக்காங்க. அதுக்கும் 'என்கொயரி' நடக்குதாம்,'' என்றாள் மித்ரா.

''மிஞ்சி மிஞ்சி போனா என்ன பண்ணுவாங்க; டிரான்ஸ்பர் தான் பண்ணுவாங்க. இந்த தைரியத்துல தான், அரசு ஊழியர்ங்க தைரியமா கை நீட்றாங்க,'' என்ற சித்ரா, ''மித்து ஊர்ல இருந்து, எங்க பிரதர்ஸ் புஷ்பராஜ், பிரகாஷ் ரெண்டு பேரும் நாளைக்கு வர்றாங்க. அக்கவுண்ட்ஸில் ஏதோ சந்தேகம் கேட்கோணும் சொன்னதானே. நாளைக்கு வா...'' என, நினைவூட்டினாள்.

''ஓ.கே., மித்து கிளம்பலாம். மழை வர்ற மாதிரி இருக்கு'' என்ற சித்ரா வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.






      Dinamalar
      Follow us