ADDED : ஏப் 28, 2024 12:38 AM

சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து விட்டது. முதல்வர் ஸ்டாலின், 'எப்படியும் 'இண்டியா' கூட்டணிக்குத்தான் வெற்றி' என நினைப்பதோடு, யார் யார் தி.மு.க.,விலிருந்து அமைச்சர்கள் ஆவர் என்பது குறித்து ஆலோசனை நடத்துவதாக செய்திகள் அடிபடுகின்றன. ஆனால், தி.மு.க.,வில் உள்ள சிலரத்து மனநிலை வேறு மாதிரியாக உள்ளது.
இந்நிலையில், தி.மு.க.,வில் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கட்டும்; ஆனால் அந்த ஒருவர் மட்டும் வெற்றி பெறவே கூடாது என, அந்த கட்சியைச் சேர்ந்த சில பிரமுகர்கள் டில்லியில் தங்களுக்கு நெருக்கமான பா.ஜ., தலைவர்களிடம் சொல்லி வருகின்றனராம்.
'தொகுதியைக் கண்டு கொள்ளாதவர். திமிர் பிடித்தவர். சென்ற முறை குறைவான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். இந்த முறை பணத்தை வாரி வீசியுள்ளார். ஒவ்வொரு வாக்காளருக்கும் அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்துள்ளார்' என, சீனியர் பா.ஜ., தலைவரிடம் தங்கள் மனத்தாங்கலை குமுறலாகக் கொட்டியுள்ளனர், அந்த தி.மு.க., பிரமுகர்கள்.

