sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

மத துவேஷத்தை துாண்டும் பாதிரியாரின் வெறுப்பு பேச்சு; ஹிந்து அமைப்புகள் கண்டனம்

/

மத துவேஷத்தை துாண்டும் பாதிரியாரின் வெறுப்பு பேச்சு; ஹிந்து அமைப்புகள் கண்டனம்

மத துவேஷத்தை துாண்டும் பாதிரியாரின் வெறுப்பு பேச்சு; ஹிந்து அமைப்புகள் கண்டனம்

மத துவேஷத்தை துாண்டும் பாதிரியாரின் வெறுப்பு பேச்சு; ஹிந்து அமைப்புகள் கண்டனம்

41


UPDATED : ஜூலை 03, 2024 09:12 AM

ADDED : ஜூலை 03, 2024 07:03 AM

Google News

UPDATED : ஜூலை 03, 2024 09:12 AM ADDED : ஜூலை 03, 2024 07:03 AM

41


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை சி.எஸ்.ஐ., இமானுவேல் சர்ச்சில் நடந்த கூட்டத்தில், பாதிரியாரின் வெறுப்பு பேச்சு, ஹிந்துக்களின் மத உணர்வுகளை துாண்டும் வகையில் அமைந்துள்ளதாக, கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

கோவை சி.எஸ்.ஐ., இமானுவேல் சர்ச்சில் கடந்த மாதம், 16ம் தேதி நடந்த கூட்டத்தில் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் பேசும் வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவரது பேச்சு , ஹிந்துக்களின் மத உணர்வுகளை துாண்டும் வகையில் அமைந்துள்ளதாக, கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:

'என்ன தெரியும் கொழுக்கட்டையும், தேங்காய் மூடியையும் சாப்பிட்டு திரியுறே நீ. மாட்டு மூத்திரத்தையும் குடிச்சிட்டு திரியறே. என்னய்யா ஆன்மிகம் உங்களுக்கு. மாட்டை தின்பவன் கீழ் ஜாதி. மாட்டு மூத்திரத்தை குடிப்பவன் மேல் ஜாதி. இது எங்கையாவது வாழ்க்கையில இருக்குமா. அறிவுதான் இருக்குதா என்று தெரியல. மாட்டு சாணியை தின்பவன் மேல் ஜாதி; 'கிராஸ் பெல்ட்' அவரு!

'சாணி வருதுல, அதை தின்பவன் கீழ் ஜாதி. இது என்னவென்று தெரியவில்லை. உலகத்தில் மலத்தை தின்னும் ஒரே ஒரு இனம் இங்குதான் இருக்கிறது. உலகத்தில் எந்த இனமும் மலத்தை திங்காது. இந்தியாவில் மட்டும்தான் மலத்தை தின்று, மூத்திரத்தை குடிக்கிறான். இப்படிப்பட்ட கேவலமான ஓர் இனத்தை, இந்தியாவில் வைத்துக்கொண்டு அவன் சொல்கிறான், 'உலகில் நான் பிரம்மாவின் தலையில் இருந்து வந்தேன் என்று!'

'தலையில் இருந்து வந்தவன் எதுக்குடா கீழ இருக்குறத திங்கறே. தலையில் இருந்து வந்தவன் தலையில்தான் நிற்கணும். நாம் மாட்டின் முன்னாடி நிற்போம். இவன் மாட்டின் பின்னாடி நின்றுகொண்டு எப்படா வாலை துாக்கும் என்று பார்க்கிறான்'

இவ்வாறு, பிரின்ஸ் கால்வின் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

Image 1288794
இந்த பேச்சுக்கு, இந்து அமைப்பினர் மத்தியில், கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட இந்து அமைப்பினர், கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பாதிரியார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட வீடியோ தொடர்பாக, பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது, பல்வேறு பிரிவுகளின் கீழ் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை கைது செய்யப்படவில்லை.

'வருத்தம் தெரிவிக்கிறேன்!'

இதுகுறித்து, பாதிரியார் பிரின்ஸ் கால்வினிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: நான் தனிப்பட்ட மதத்தை பற்றியோ, ஒரு அமைப்பு, ஜாதியை பற்றியோ பேசவில்லை. உணவின் அடிப்படையில் ஒருவரிடம் ஏற்றத்தாழ்வு பார்க்க முடியாது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு உணவு முறை இருக்கிறது. அந்த உணவின் அடிப்படையில் ஒருவன் தாழ்ந்தவன், ஒருவன் மேலானவன் என்று சொல்ல முடியாது.உதாரணமாக, மாட்டு இறைச்சி சாப்பிடுபவரை கீழ் ஜாதி என்கின்றனர். மாட்டு மூத்திரத்தை குடிப்பவர்களும், சாணத்தை சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். இரண்டும் ஒன்றுதான். இது என்ன கலாசாரமாக இருக்கும்.
கலாசாரம் என்றால் ஒரேமாதிரிதான் இருக்க வேண்டும். இந்த ஜாதி வேறுபாடுகள் கலாசாரத்தில் இருக்கிறது. அதுபற்றி கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்தில்தான் பேசினேன். எனக்கு எந்தவிதமான மத துவேஷமும் கிடையாது. ஹிந்து சமயத்தையும், கடவுள் பற்றியும் எதுவும் பேசவில்லை.வேறு யாரையும் புண்படுத்தும் நோக்கமும் எனக்கு இல்லை. என்னுடைய ஆலயத்தில் இருக்கும் சில பிரச்னைகளில் எனக்கு எதிரானவர்கள், வீடியோவை 'எடிட்' செய்து வெளியிட்டு பிரச்னை செய்கின்றனர். ஹிந்து சமயத்தை புண்படும்படி பேசியிருந்தால், மனதார வருத்தம் தெரிவிக்கிறேன். வரும் காலங்களில் கவனமுடன் பேச ஆயத்தம் ஆகிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us