ADDED : ஏப் 28, 2024 04:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யும்படி, இங்குள்ள காங்., நிர்வாகிகள், ராகுலுக்கும், பிரியங்காவுக்கும் யோசனை கூறியுள்ளனர். உ.பி., வாக்களர்களைக் கவர, ராமர் கோவில் செல்வது அவசியம் என்றும், இவர்கள் ராகுல், பிரியங்காவிடம் சொல்லியுள்ளனர்.
இதற்கு ராகுல் மறுப்பு தெரிவித்துள்ளாராம். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தும் ராகுல் பங்கேற்கவில்லை. அத்தோடு கும்பாபிஷேகம் குறித்து கடுமையாக விமர்சனமும் செய்தார்.
இந்நிலையில் எப்படி ராமர் கோவிலில் தரிசனம் செய்ய முடியும் என்கிறாராம், ராகுல். இதனால் உ.பி.,யில் உள்ள காங்., நிர்வாகிகள் வருத்தத்தில் உள்ளனர்.

