UPDATED : பிப் 24, 2025 05:41 AM
ADDED : பிப் 23, 2025 12:17 AM

புதுடில்லி: டில்லியின் பா.ஜ., முதல்வராக ரேகா குப்தா பதவியேற்ற பின், தன் சக அமைச்சர்களுடன், டில்லியில் உள்ள யமுனை நதிக்கரைக்கு சென்றார். காசியில் கங்கை நதிக்கு ஆரத்தி எடுப்பது போல இங்கு, யமுனைக்கும் ஆரத்தி நடத்தினார் ரேகா.
இந்த நிகழ்ச்சிக்கு, தமிழக எம்.எல்.ஏ.,வும், பா.ஜ., மகளிர் அணி தலைவருமான, வானதியை அழைத்திருந்தார் ரேகா. அத்துடன், பா.ஜ., தலைவர் நட்டா, 'நீங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்' என, வானதியிடம் சொன்னாராம்.
ரேகாவுடன், ஆங்கிலத்திலேயே பேசினார் வானதி. சக அமைச்சர்கள், பா.ஜ., தொண்டர்கள் அனைவரும், ஹிந்தியில் பேசிக் கொண்டிருந்தனர்; வானதிக்கு ஹிந்தி ஓரளவு தெரிந்தாலும் சரளமாக பேச முடியவில்லை. 'நீங்கள் விரைவில் ஹிந்தி நன்றாக கற்றுக் கொள்ளுங்கள்; அப்போதுதான், வடமாநில அரசியலை நன்றாக புரிந்து கொள்வீர்கள்' என்றாராம், டில்லி முதல்வர்.

