UPDATED : மே 26, 2024 08:31 AM
ADDED : மே 26, 2024 03:12 AM

டில்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் தமிழக முதல்வர் குறித்து ஒரு விஷயம் பேசப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் செல்ல அனுமதி கேட்டு பிரதமருக்கு எழுதிய கடிதம் இப்போது வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாம். இது குறித்துதான் அமைச்சகத்தில் பேச்சு.
ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஏதாவது 15 நாட்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன் செல்ல அனுமதி கேட்டுள்ளாராம் முதல்வர். தமிழகதிற்கு வெளிநாட்டு மூலதனத்தைக் கொண்டு வர இந்த வெளிநாட்டு பயணம் என சொல்லப்படுகிறது.
தன் பயணத்தின் போது, அங்கு மாநாடு நடத்தி தமிழகத்திற்கு வெளிநாடு மூலதனங்களைக் கொண்டு வர முதல்வர் முயற்சி மேற்கொள்வாராம். அந்த நாடுகளில் உள்ள தொழிலதிபர்களைச் சந்திக்க உள்ளாராம் முதல்வர். இவருடன் ஐந்து அமைச்சர்களும் வெளிநாடு செல்வர் என்கின்றனர்.