ADDED : மார் 30, 2024 02:20 AM

கேரள மாநிலம் பத்தனம்திட்டா தொகுதியில், பா.ஜ., சார்பில் காங்கிரஸ் மூத்ததலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் ஆன்டனியும், காங்., கூட்டணி சார்பில், தற்போதைய எம்.பி., ஆன்டோ ஆண்டனியும், இடதுசாரி கூட்டணி சார்பில் முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக்கும் போட்டியிடுகின்றனர்.
கடந்த இரண்டு முறையும் இங்கு காங்., வேட்பாளர் ஆன்டோ ஆண்டனி தான் வெற்றி பெற்றார். எனவே, இம்முறை எப்படியாவது தொகுதியை கைப்பற்ற வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக் களம் இறக்கப்பட்டுள்ளார்.
இந்த இரு தலைவர்களையும் எதிர்த்து, இளம் வேட்பாளரான அனில் ஆண்டனியை பா.ஜ., நிறுத்தியுள்ளது. கடந்த தேர்தலில், பா.ஜ., மாநில தலைவர் சுரேந்திரன் இங்கு போட்டியிட்டு மூன்று லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகளைபெற்றார்.
அனில் ஆன்டனிகூறியதாவது:
காங்கிரசுக்கு இனி இந்தியாவில் எந்த எதிர்காலமும் இல்லை. அவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று போட்டியிடுவது தான் நல்லது. தேச துரோக கருத்துக்களை கூறிவரும் காங்., வேட்பாளர் ஆன்டோ ஆண்டனிக்கு ஆதரவாக, எனக்கு எதிராக, மூத்த காங்கிரஸ்காரரான என் தந்தை ஏ.கே. அந்தோணி இங்கு பிரசாரம் செய்ய வரமாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர்--
