எஸ்.சி., எஸ்.டி.,க்கு க்ரீமிலேயர் வராது: மத்திய அரசு முடிவு
எஸ்.சி., எஸ்.டி.,க்கு க்ரீமிலேயர் வராது: மத்திய அரசு முடிவு
ADDED : ஆக 10, 2024 07:05 AM

'எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு இடஒதுக்கீட்டில் க்ரீமிலேயர் முறை அமல்படுத்தப்படாது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்தில், இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இடஒதுக்கீட்டில் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு க்ரீமிலேயர் முறையை அமல்படுத்த பரிந்துரைத்தது. இந்த முடிவை அமல்படுத்தக் கூடாது என, லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் குழுவினர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வலியுறுத்தினர்.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்துக்கு பின் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “அரசியலமைப்புச் சட்டத்தின்படி, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்குள் க்ரீமிலேயர் வழங்குவது அம்பேத்கர் கொள்கைக்கு எதிரானது. ஆகையால், அவர்களுக்கு க்ரீமிலேயர் முறையில் இடஒதுக்கீடு அமல்படுத்தும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை,” என்றார்.
-நமது சிறப்பு நிருபர்-

