ADDED : ஏப் 14, 2024 08:11 AM

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 19ல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதகளமாக இருந்த பிரசார களம் அமைதியாகி விடும். சில தலைவர்கள் வெளிநாடுகளில் ஓய்வு எடுக்க சென்று விடுவர். ஆனால், 'இனி தான் தமிழக அரசியலில் ஆட்டம் ஆரம்பிக்கும்' என்கின்றனர், அமலாக்கத் துறை மற்றும் போதை கடத்தல் தடுப்பு அமைப்பினர்.
வேலுாரிலும், கோவையிலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, 'தமிழகத்தில் மணல் மாபியா, போதை மாபியா ஊடுருவி விட்டது' என, தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்தார். இதற்கு காரணம், 'இந்த இரண்டு விஷயங்கள் தொடர்பாக, விசாரணையில் கிடைத்த முக்கிய தகவல்கள் தான்' என, சொல்லப்படுகிறது. சினிமா இயக்குனர் அமீர், பல விஷயங்களை அமலாக்கத்துறைக்கு தெரிவித்துள்ளாராம்.
'போதை கடத்தல் விவகாரம் 19ம் தேதிக்குப் பின் மிகவும் தீவிரமாகும்; பல முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு இனிமேல் தான் தலைவலி ஆரம்பிக்கும். இதுவரை நீங்கள் பார்த்தது வெறும், 'டிரெய்லர்' தான்' என, கமென்ட்' அடிக்கின்றனர் அதிகாரிகள்.

