sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

'கூகுள் பே'வுல ஆபீசர் வாங்குறாரு லஞ்சம்: சி.எம்., ஆபீஸ் போன் வந்தாலே பதறுது நெஞ்சம்!

/

'கூகுள் பே'வுல ஆபீசர் வாங்குறாரு லஞ்சம்: சி.எம்., ஆபீஸ் போன் வந்தாலே பதறுது நெஞ்சம்!

'கூகுள் பே'வுல ஆபீசர் வாங்குறாரு லஞ்சம்: சி.எம்., ஆபீஸ் போன் வந்தாலே பதறுது நெஞ்சம்!

'கூகுள் பே'வுல ஆபீசர் வாங்குறாரு லஞ்சம்: சி.எம்., ஆபீஸ் போன் வந்தாலே பதறுது நெஞ்சம்!

4


UPDATED : மே 28, 2024 06:16 AM

ADDED : மே 28, 2024 01:07 AM

Google News

UPDATED : மே 28, 2024 06:16 AM ADDED : மே 28, 2024 01:07 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பணி நிமித்தமாக, கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்றிருந்த சித்ரா, கேன்டீன் அருகே ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தினாள்.

வராண்டாவில் நின்றிருந்த டி.ஆர்.ஓ., காரை பார்த்த மித்ரா, ''அக்கா, பீளமேடு ஆர்.கே., மில் காலனியில, 12 கோடி ரூபா மதிப்புள்ள, 38 சென்ட் ரிசர்வ் சைட்டை, ஐகோர்ட் உத்தரவை மீறி, பட்டா பெயர் மாத்திக் கொடுத்த விவகாரத்தை பத்தி, போன வாரம் பேசுனோமே... அது சம்பந்தமா உண்மையா விசாரணை நடத்துனா, பலரும் சிக்குவாங்க,''

''சவுத் தாலுகாவுல இருக்குற, ஏரியா சர்வேயர், தில்லுமுல்லு வேலைக்கு ஒத்துவராததால, வேற ஒரு சர்வேயரை வச்சு அளந்து, 'ஆன்லைன்'ல மாத்திருக்காங்க. அதை விட பெரிய 'பிராடு' வேலையும் நடந்திருக்கு,''

''என்னான்னா... சீனியர் டிராப்ட்ஸ்மேன் ஒருத்தரு, இந்த வரைபடத்தை மாத்திக் கொடுத்திருக்காரு. அவர் யாருன்னு விசாரிச்சா, எட்டு மாசத்துக்கு முன்னாடி, இங்க இருந்து டிரான்ஸ்பரான சீனியர் டிராப்ட்ஸ்மேனாம். இவுங்க ரெண்டு பேரையும் வச்சு, தில்லாலங்கடி வேலைய 'ஜெயமா' செஞ்சு முடிச்சிருக்காங்க,''

இருவரும் பேசிக்கொண்டே முதல் தளத்துக்கு சென்றனர். உளவுத்துறை போலீசார் ஆங்காங்கே நின்று, உயரதிகாரிகளுக்கு தகவல் சொல்லிக் கொண்டிருந்தனர்.

மிரட்டும் ஆபீசர்


''ரெவின்யூ டிபார்ட்மென்ட்ல பட்டா மாத்துறதுக்கு, பணம் கேட்டு மாசக்கணக்குல இழுத்தடிக்கிறது ஒரு பக்கம்னா, நில மதிப்பைக் கணக்குப் பண்ணி, தப்பான முறையில பட்டா பெயர் மாத்துறதை மட்டும், உடனே பண்ணிக் கொடுத்துர்றாங்களாம். இதுக்கு, பெரிய பெரிய இடத்துல இருந்தெல்லாம் 'ரெக்கமண்டேஷன்' வருதாம்,''

''பல கோடி ரூபா மதிப்புள்ள நிலங்களை பட்டா பேர் மாத்துறதுக்கு, சி.எம்., ஆபீஸ்ல இருக்குற 'மணி'யான ஒரு ஆபீசர், இங்க இருக்குற ஆபீசர்களுக்கு அடிக்கடி போன் பண்ணி, 'இம்சை' பண்றாராம். லேண்ட் லைன்ல இருந்து அவர் பேசுறப்போ, 'சி.எம்., ஆபீஸ்'ன்னு ட்ரூ காலர்ல வருதாம்,''

''அதுல பேசுறவரு, 'சி.எம்., ஸ்பெஷல் பி.ஏ., பேசுறேன்'னு சொல்றதால, பயப்படுற ஆபீசர்ஸ், கேக்குறதை செஞ்சு கொடுத்துர்றாங்களாம். இதுக்கு முன்னாடி டி.ஆர்.ஓ.,வா இருந்த மேடத்தை மிரட்டிப் பார்த்தாராம். அதுக்கு, 'நானும் ஒங்க கேடர் ஆபீசருங்கிறதை ஞாபகம் வச்சுக்கோங்க; என்னை மிரட்டிப் பார்க்காதீங்கன்னு சொல்லி மறுத்துட்டாராம்.

''அதுக்கப்புறம் ஆபீசர்களை கூப்பிட்டு, 'சென்னை ஆபீசர், ஏதாவது ரெக்கமண்டேஷன் பண்ணுனா, சரியா இருந்தா மட்டும் செஞ்சு கொடுங்க'ன்னு சொல்லிருக்காங்க. இப்போ... எல்லா தாலுகா ஆபீசர்களையும் கூப்பிட்டு, அவரே நேரடியாப் பேசி, தப்பான வேலைகளைச் செய்யச்சொல்லி, உத்தரவு போடுறாராம். அவர் சொல்றதை செஞ்சா, எதிர்காலத்துல சிக்கல்ல சிக்கிடுவோமேன்னு, தாலுகா ஆபீசர்ஸ் புலம்பிட்டு இருக்காங்க,''

ஆளுங்கட்சியினர் உஷார்


இருவரும் இரண்டாவது தளத்துக்குச் சென்றனர். கலெக்டர் தலைமையில், தேர்தல் தொடர்பான கூட்டம் நடந்து கொண்டிருந்தது.

சித்ரா, ''அடுத்த வாரம் இந்நேரம் ஓட்டு எண்ணிட்டு இருப்பாங்க. எண்ணிக்கையில குளறுபடி நடக்காம இருக்கறதுக்காக, உடன்பிறப்புகள் தரப்புல பூத் வாரியா, 'படிவம் 17சி' வாங்கி, மொத்த விவரத்தையும் தொகுதி வாரியா தொகுத்து வச்சிருக்காங்க,''

''படிவம்-17சி-ங்கறது, ஓட்டுச்சாவடி அலுவலர்களால தயார் செய்யப்படுற டேட்டா. பூத்ல மொத்த வாக்காளர் எண்ணிக்கை, ஓட்டுப்போட வந்தவங்க எண்ணிக்கை, ஏதேனும் காரணத்தால ஓட்டுப்போட அனுமதிக்கப்படாதவங்க இருந்தா, அந்த எண்ணிக்கை, ஓட்டு இயந்திரத்துல பதிவான மொத்த ஓட்டு எண்ணிக்கை, தபால் ஓட்டு விவரம்னு எல்லா விஷயமும் இருக்கும்.

இந்த விவரத்தை, பூத் வாரியா சேகரிச்சு, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் டேட்டா ரெடி பண்ணிருக்காங்க. ஓட்டு எண்ணுறப்போ சந்தேகம் வந்தாலோ, குளறுபடி நடந்தாலோ, அதிகாரிகள கிடுக்கிப்பிடி போட, தயாரா இருக்காங்களாம்,''

மாவட்டத்துக்கு ஒன்னு!


''மாவட்டத்துக்கு ஒரு கருணாநிதி சிலை வைக்கறதுக்கு, ஏற்பாடு செய்றாங்களாமே...''

''லோக்சபா தேர்தல் முடிவை அறிவிச்சதுக்கு அப்புறம், நம்மூர்ல தடபுடலா பங்சன் நடத்துறதுக்கு ஆளுங்கட்சி தரப்புல தயாராகிட்டு இருக்காங்க. கருமத்தம்பட்டியில சிலை வைக்கறதுக்கு இடம் தேர்வு செஞ்சிருக்காங்க; பொறுப்பு மினிஸ்டரான முத்துசாமியும், நேர்ல வந்துட்டு போயிருக்காரு,''

''இதே மாதிரி, காந்திபுரத்துல பஸ் ஸ்டாண்ட்டுக்கு எதிரே இருக்கற அண்ணாதுரை சிலையை எடுத்துட்டு, செம்மொழி பூங்கா வளாகத்துக்குள்ள, ஈ.வெ.ரா., - அண்ணாதுரை - கருணாநிதி சிலைகளை ஒரே ரவுண்டானாவுக்குள்ள வர்ற மாதிரி வைக்கலாமான்னு, ஆலோசனை செஞ்சுட்டு இருக்காங்களாம்,''

அலைக்கழிச்ச ஆபீசர்ஸ்


''மித்து, திராவிட மாடல் அரசுன்னு நெஞ்சை நிமிர்த்தி சொல்லிட்டு இருக்காங்க. ஆனா, பத்தாங் கிளாஸ், பிளஸ் 2 எக்ஸாம்ல தமிழ் பாடத்துலேயே, ஏகப்பட்ட ஸ்டூடண்ட்ஸ் பெயில் ஆகிட்டாங்களே...''

''ஆமாக்கா, அது சம்பந்தமா, மாவட்ட நிர்வாகத்துல இருந்து கல்வித்துறை அதிகாரிகள்கிட்ட 'என்கொயரி' செஞ்சுட்டு இருக்காங்க.

பருப்பு ஸ்டாக் இல்லை


மாவட்ட வழங்கல் துறை அலுவலகத்தை கடந்து சென்ற சித்ரா, ''என்ன மித்து, இந்த மாசம் ரேஷன் கடைகள்ல பொருளே போடலையாமே. ஏழை ஜனங்க, கடைக்கு அலையுறாங்களாமே...''

''அதுவா... ரேஷன் கடைகளுக்கு பொருள் சப்ளை செய்ற டெண்டர் காலக்கெடு முடிஞ்சிடுச்சாம். எலக்சன் நடந்துட்டு இருக்கறதுனால, புது டெண்டர் கோர முடியலைன்னு, 'சப்பை' காரணம் சொல்றாங்க. கவர்மென்ட் மேல பொதுமக்களுக்கு வெறுப்பு வந்ததும், சென்னையில இருந்து ஆபீசர்ஸ் ஓடோடி வந்து, குடோன்னு போயி, ஸ்டாக் நிலவரத்தை 'செக்' பண்ணி பார்த்துருக்காங்க,''

''அதுக்கப்புறம்... எலக்சன் கமிஷன்ல ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி, இப்போ பொருள் சப்ளை பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. இருந்தாலும், நம்ம மாவட்டத்துல இருக்கற எல்லா கடைக்கும் எல்லா பொருளும் போயி சேரலையாம். பருப்பு குவாலிட்டி இல்லாம வந்ததுனால, ஒரு லோடை திருப்பி அனுப்பிட்டாங்களாம். பருப்பு சப்ளை இல்லாததுனால, கடைக்கு பப்ளிக் நடையாய் நடக்குறாங்க,''

விளையாட்டு வீரர்கள் அதிருப்தி


இருவரும் பேசிக்கொண்டே வெளியே வந்தனர். ஸ்கூட்டரில் புறப்பட்ட சித்ரா, உப்பிலிபாளையம் ஆடீஸ் வீதி நேரு ஸ்டேடியம் வழியாக, வ.உ.சி., மைதானத்துக்கு சென்றாள். ஸ்டேடியம் முன் விளையாட்டு வீரர்கள் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களை கவனித்த மித்ரா, ''இப்போ, விளையாட்டுத் துறையே விளையாட்டா போயிட்டு இருக்குக்கா... கொஞ்ச நாளைக்கு முன்னாடி, பிரைவேட் கிளப் சார்புல தடகள பயிற்சி வகுப்பு நடந்திருக்கு; அதே நேரத்துல, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்புல, கோடை கால பயிற்சி முகாம் நடந்திருக்கு.

''இதுல, கால்பந்து பயிற்சி எடுத்த சிறுவர்கள் அடிச்ச பந்து, தடகள பயிற்சியில ஈடுபட்டிருந்த ஒரு வீராங்கனை மேல பட்டிருக்கு. திரும்பத் திரும்ப 'அட்டாக்' நடந்திருக்கு. பொறுத்துப் பார்த்த பயிற்சியாளர், கோபத்துல சிறுவர்களை திட்டிட்டாரு. இதனால, அந்த பயிற்சியாளர் ஸ்டேடியத்துக்குள்ள வரக்கூடாதுன்னு, 'தடா' போட்டிருக்காங்க.

வேற வழியில்லாம, பார்வையாளர் அமரக் கூடிய இடத்துல இருந்து, ஸ்டூடண்ட்ஸ்க்கு டிரெய்னிங் கொடுக்குறாரு. ஸ்போர்ட்ஸ் ஆபீசர் கிட்ட கேட்டதுக்கு, கலெக்டர்கிட்ட கேளுங்கன்னு திசை திருப்பி விட்டிருக்காரு,''

''ஏற்கனவே, கவுன்டிங் சென்டர்ல ஒரு பொண்ணுக்கு, பாலியல் பலாத்காரம் நடந்த விவகாரத்துலேயே, மாவட்ட நிர்வாகத்துல இருந்து நியாயமான நடவடிக்கை எடுக்கலை.

இப்போ, ஒரு வீராங்கனை மேல, 'பந்து அட்டாக்' நடந்த விவகாரத்துல ஒழுங்கா விசாரிப்பாங்களான்னு தெரியலை,'' என்ற மித்ரா, அரசு பொருட்காட்சிக்குள் நுழைந்தாள்.

'கூகுள் பே' லஞ்சம்


பின்தொடர்ந்து வந்த சித்ரா, ''கூகுள் பே-வுல லஞ்சப்பணத்தை வாங்குனதுல, ஒரு வி.ஏ.ஓ.,வசமா சிக்கிட்டாராமே...'' என. கேட்டாள்.

''அதுவா... கே.கே.புதுார்ல வசிக்குற ஒரு விதவை பெண், ஸ்லம் போர்டுல வீடு அலாட்மென்ட் வாங்குறதுக்காக, இ-சேவை மையம் மூலமா, வருமான சர்ட்டிபிகேட் கேட்டு, 'அப்ளை' செஞ்சிருக்காங்க. சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ., விண்ணப்பதாரரை கூப்பிட்டு, 'என்கொயரி' செஞ்சுட்டு, ஆயிரம் ரூபா லஞ்சம் கேட்டிருக்காரு,''

''அந்த பெண், 'கூகுள் பே' மூலமா லஞ்சப்பணத்தை அனுப்பி இருக்காங்க. அந்த ஆதாரத்தை, லஞ்ச ஒழிப்புத்துறைக்கும், கலெக்டருக்கும் புகாரா அனுப்பியிருக்காங்க. முதல்வர் தனிப்பிரிவுக்கும் 'கம்ப்ளைன்ட்' அனுப்பியிருக்காங்க.

இது சம்பந்தமான விசாரணை நடந்துக்கிட்டு இருக்கு. 'கூகுள் பே'யில பணம் அனுப்புனதுக்கு ஆதாரம் 'ஸ்ட்ராங்க்'கா இருக்கறதுனால, வி.ஏ.ஓ., மேல கண்டிப்பா நடவடிக்கை எடுப்பாங்கன்னு சொல்றாங்க,'' என்றாள் மித்ரா.

போலி சான்று


டவுன்ஹால் மணிக்கூண்டு போலவே, கார்ப்பரேஷன் அரங்கு முகப்பு அச்சு அசலாக வடிவமைத்து இருந்தார்கள். அதைப்பார்த்து பிரமித்த சித்ரா, ''கார்ப்பரேஷன் ஸ்டாப்ஸ் வேலைபார்க்குறதுல எப்பவுமே கில்லாடியா இருப்பாங்க. கட்டட நிறைவு சான்று, போலியா கொடுக்குறாங்களாம். கார்ப்பரேஷன்ல வேலைபார்த்த ஒரு ஐ.ஏ.எஸ்., ஆபீசர் இல்லீகலா கட்டுன வீட்டுக்கு, போலியா கட்டட நிறைவு சான்று கொடுத்திருக்காங்களாம். அதை வச்சு, இ.பி., கனெக்சன் வாங்கிட்டாங்களாம்...''

''கட்டட நிறைவு சான்று இருந்தா தான், இ.பி., கனெக்சன் கொடுக்கணும்ங்கிறது ரூல். ஆனா, மேட்டுப்பாளையத்துல, கட்டட நிறைவு சான்று வாங்காமலேயே, இணைப்பு கொடுக்குறாங்களாம்,'' என்றபடி, ராட்டினத்தில் பயணிக்க, டிக்கெட் எடுக்க, 'க்யூ'வில் நின்றாள்.

தனது மொபைல் போனுக்கு வந்திருந்த, 'வாட்ஸ் ஆப்' குறுஞ்செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.






      Dinamalar
      Follow us