sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

பாக்கெட் நிரப்பும் போலீஸ்!: சட்டவிரோத 'பார்'களாக மாறிய ஓட்டல்கள் : கோவையில் களையெடுப்பாரா டி.ஜி.பி.,?

/

பாக்கெட் நிரப்பும் போலீஸ்!: சட்டவிரோத 'பார்'களாக மாறிய ஓட்டல்கள் : கோவையில் களையெடுப்பாரா டி.ஜி.பி.,?

பாக்கெட் நிரப்பும் போலீஸ்!: சட்டவிரோத 'பார்'களாக மாறிய ஓட்டல்கள் : கோவையில் களையெடுப்பாரா டி.ஜி.பி.,?

பாக்கெட் நிரப்பும் போலீஸ்!: சட்டவிரோத 'பார்'களாக மாறிய ஓட்டல்கள் : கோவையில் களையெடுப்பாரா டி.ஜி.பி.,?

9


ADDED : ஆக 05, 2024 05:07 AM

Google News

ADDED : ஆக 05, 2024 05:07 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை மாவட்டம் முழுவதும் நன்கு திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்டதைப்போன்று ஸ்டேஷன் போலீசார் மற்றும் உளவு போலீசார் இணைந்து, மாதாந்திர மாமூல் வேட்டையில் ஈடுபட்டிருப்பதால், இந்த தொகை யாருக்கு போகிறது? என்ற சந்தேகம் நேர்மையான போலீசார் மத்தியில் எழுந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, சட்டவிரோத சாலையோர ஓட்டல் குடில் மற்றும் தாபா பார்கள், கனிமவள கடத்தல், 3 நம்பர் லாட்டரி, குட்கா உள்ளிட்ட போதை வஸ்து விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் கீழ் மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், வால்பாறை, பொள்ளாச்சி மற்றும் கருமத்தம்பட்டி 'சப் டிவிசன்'கள் உள்ளன; மாவட்டத்தில் மொத்தம், 38 ஸ்டேஷன்கள் உள்ளன.

லோக்கல் ஸ்டேஷன் போலீசாரின் நடவடிக்கைகளை கண்காணித்து எஸ்.பி., உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு ஒற்றுத்தகவல் அனுப்ப வேண்டிய போலீசாரே, கிரிமினல்களுடன் கைகோர்த்து செயல்படுவதாக, பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நேர்மையான போலீசார் சிலர் கூறுகையில், 'கோவை வடக்கில், 165 டாஸ்மாக் மதுக்கடைகளும், காலை 11:00 முதல் இரவு 11:00 மணி வரை செயல்படும், 15 பார்களும் உள்ளன. அதேபோல் கோவை தெற்கில், 130 டாஸ்மாக் மதுக்கடைகளும், காலை 11:00 முதல் இரவு 11:00 மணி வரை செயல்படும், 10 பார்களும் உள்ளன. தவிர, 30க்கும் மேற்பட்ட 'தாபா'க்கள் இருக்கின்றன.

இவற்றில், விதிமீறி மது விற்க அனுமதிப்பதன் வாயிலாக, சட்டவிரோத பார்கள் மற்றும் தாபா, குடில் ஓட்டல்களில் இருந்தும் உள்ளூர் போலீசார், ரோந்து போலீசார், ஸ்பெஷல் பிராஞ்ச் உள்ளிட்ட உளவு போலீசாருக்கு, மாதம்தோறும் தலா ரூ.10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை, மாமூல் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

சட்டவிரோத மது 'பார்'கள்


கோவில்பாளையம், அன்னுார் போலீஸ் எல்லைக்குள் கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பாளையம், குரும்பபாளையம் - காளப்பட்டி சாலை உள்ளிட்ட இடங்களில் கோவில்பாளையத்தில் 9 சாலையோர தாபா ஓட்டல்கள்; குரும்பபாளையத்தில் 2 ; கருமத்தம்பட்டியில் அவிநாசி சாலையில் 11, சோமனூர் - அன்னூர் சாலையில் 6; சூலுாரில் திருச்சி சாலையில் 6, எல் அண்ட் டி பைபாஸ்சில் 4.அவிநாசி சாலையில் 6, பாப்பம்பட்டி சாலையில் 3, சுல்த்தான்பேட்டை பொள்ளாச்சி சாலையில் 3, செட்டிபாளையம் சாலையில் 2; பேரூரில் சிறுவாணி சாலையில் 2; காரமடை - அன்னூர் சாலையில் 2; மதுக்கரையில் எல் அண்ட் டி பைபாஸ் சாலை, கோவை புதுார் - வாளையார், வேலந்தாவளம், மலுமிச்சம்பட்டி, செட்டிபாளையம் சாலைகளில் 13; ஆலாந்துறையில் சிறுவாணி மெயின் ரோடு, சித்திரைச்சாவடியில் 2 தாபா மற்றும் குடில் ஓட்டல்கள் இயங்குகின்றன.

மேட்டுப்பாளையம் ரோட்டில் நரசிம்மநாயக்கன்பாளையம், எல்.எம்.டபிள்யூ., பிரிவு, பெரியநாயக்கன்பாளையம், ஜோதிபுரம், வீரபாண்டி பிரிவு, தடாகம் ரோடு கோவில் மேடு, இடையர் பாளையம் பிரிவு, கணுவாய், திருவள்ளுவர் நகர், சின்னதடாகம் மற்றும் ஆனை கட்டி வட்டாரத்தில் உள்ள அனுமதியற்ற ரீசார்ட்களிலும் மது வினியோகம் நடக்கிறது.

இவற்றில் நடக்கும் சட்டவிரோத மது சப்ளைக்கு, போலீசார் மாதம் தோறும் பல லட்சம் ரூபாய் மாமூல் பறிப்பதாக, புகார் எழுந்துள்ளது. மது சப்ளை செய்யாத குடில் ஓட்டல்களும் உண்டு. அவற்றில் இருந்தும், போலீசார் பணம் பறிக்கத்துவங்கியிருப்பதால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கனிமவளம் கடத்தல்


மேட்டுப்பாளையம் சப் டிவிஷனில் பல இடங்களில், அனுமதியற்ற நேரங்களில் டாஸ்மாக் மது விற்பனை நடக்கிறது. '3 நம்பர்' லாட்டரி விற்பனை, சீட்டாட்டத்துக்கு பஞ்சமில்லை. டாஸ்மாக் பார்களில் இருந்து மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தலா ரூ.10ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை, மாமூல் செல்கிறது. கனிம வளம் கொண்டு செல்லப்படும் லாரிகளுக்கு, தலா ரூ.1000 வசூல் செய்யப்படுவதாக, டிரைவர்கள் தெரிவிக்கின்றனர்.

பொள்ளாச்சியில், 'ஏரியாவுக்கு' ஏற்ப டாஸ்மாக் பார் உள்ளிட்டவற்றில் மாமூல் நிர்ணயித்து, பதவிக்கேற்ப வசூலிக்கப்படுகிறது. தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட சோதனைச்சாவடிகளில் மாமூல் வசூல் தொடர்கிறது. கழிவுகளை ஏற்றி வந்து, பொள்ளாச்சி பகுதியில் கொட்டினாலும் கண்டுகொள்ளாமல் மாமூல் வசூலிக்கின்றனர்.

கடத்தலுக்கு ரூ.1000 மாமூல்


கேரள மாநில எல்லையையொட்டி, குவாரிகளில் இருந்து அதிகளவு கனிம வளம் கடத்த வாகனங்களிடம் தலா 1000 ரூபாய் வசூலிக்கின்றனர். நாளொன்றுக்கு 200 வாகனங்கள் கடத்தலில் ஈடுபடுகின்றன. கோமங்கலம், வடக்கிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன்கள், தனித்தீவாக மாறிவிட்டன. மக்களின் பெரும்பாலான புகார்கள், கட்ட பஞ்சாயத்திலேயே முடிக்கப்படுகின்றன.

பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் போலீசாருக்கு மாமூல் கொடுத்துவிட்டு கஞ்சா, மூன்று நம்பர் லாட்டரி, லாட்டரி சீட்டு விற்கப்படுகிறது.

லோக்கல் போலீசாரும், தனிப்பிரிவு போலீசாரும் மாமூலாக பணியாற்றி வருவதால், உயரதிகாரிகளுக்கு உண்மையான தகவல்கள் மறைக்கப்படுகின்றன என்ற புகார், நேர்மையான போலீசார் மத்தியில் உள்ளது.

கான்கிரீட் கம்பெனிகளில் இருந்து மாதம் ரூ.1 லட்சம்

சூலுாரில் கஞ்சா புழக்கம், புகையிலை பொருட்கள் பதுக்கல் அதிகம் உள்ளது. எப்எல் 2 பார்கள், மாதம் 40 ஆயிரம் ரூபாய் வரை போலீசுக்கு, லஞ்சம் கொடுத்து சரக்கு விற்பனை செய்கின்றனர். அதேபோல், டாஸ்மாக் பார்களில் இருந்தும், மாதம் 25 ஆயிரம் வரை லஞ்சம் கொடுக்கப்படுகிறது. குவாரிகள், ரெடிமிக்ஸ் கான்கிரீட் கம்பெனிகளில் இருந்து, மாதம் 1 லட்சம் ரூபாய் போலீசுக்கு லஞ்சம் போகிறது.



- நமது நிருபர் குழு -






      Dinamalar
      Follow us