தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ தேவையற்ற கோஷங்களுக்கு 'நோ' கட்சியினருக்கு ராமதாஸ் உத்தரவு

தேவையற்ற கோஷங்களுக்கு 'நோ' கட்சியினருக்கு ராமதாஸ் உத்தரவு

தேவையற்ற கோஷங்களுக்கு 'நோ' கட்சியினருக்கு ராமதாஸ் உத்தரவு


UPDATED : பிப் 22, 2025 07:23 PM

ADDED : பிப் 22, 2025 10:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 22, 2025 07:23 PM ADDED : பிப் 22, 2025 10:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை; 'கும்பகோணத்தில் நாளை நடக்கும் வன்னியர் சங்க மாநாட்டில், தேவையற்ற கோஷங்களை எழுப்ப வேண்டாம்' என, பா.ம.க., தொண்டர்களுக்கு அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துஉள்ளார்.

கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:


வன்னியர் சங்கம் சார்பில், கும்பகோணம் அருகே தாராசுரத்தில், சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நாளை நடக்கஉள்ளது.

சமூக நீதி, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, சமய, சமுதாய நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கி, அரசின் கவனத்தை திருப்புவதற்கான முயற்சியே இந்த மாநாடு.

மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு தேவையான இருக்கைகள், குடிநீர், கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சமய, சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன.

தமிழகத்தில் சமூக நீதி, சமூக ஒற்றுமை, நல்லிணக்கத்திற்காக, கடந்த 45 ஆண்டு காலங்களில் ஏராளமான பணிகளை செய்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக, கும்பகோணத்தில் நடக்கும் மாநாடு, தமிழகத்தின் சமூக நீதி வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும்.

மாநாட்டுக்கு, பா.ம.க.,வினர் குடும்பத்துடன் அணி திரண்டு வரும்போது, பாதுகாப்பு முக்கியம் என்பதால், முன்கூட்டியே புறப்பட்டு வர வேண்டும். வரும் வழியில் அமர்ந்து சாப்பிடக்கூடாது; தேவையற்ற கோஷங்களை எழுப்பக்கூடாது. பா.ம.க.,வை சீண்டும் செயல்களில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிர்வினையாற்றாமல் கடந்து செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us