தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/ப்ரீமியம்/'ஓய்வில்லா உழைப்பாளி': பா.ஜ.,வினர் நெகிழ்ச்சி

'ஓய்வில்லா உழைப்பாளி': பா.ஜ.,வினர் நெகிழ்ச்சி

'ஓய்வில்லா உழைப்பாளி': பா.ஜ.,வினர் நெகிழ்ச்சி


UPDATED : ஏப் 03, 2024 07:21 AM

ADDED : ஏப் 02, 2024 11:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 03, 2024 07:21 AM ADDED : ஏப் 02, 2024 11:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சமீபத்தில் ஐந்து மாவட்டங்களில் பிரசாரம் செய்து விட்டு, கோவை திரும்பிய பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, வழியில், பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பகுதியில், ஐந்து நிமிடம் ஓய்வு எடுக்க வேண்டி காரை ரோட்டோரம் நிறுத்தினார்.

அவ்வழியாக வந்த ஆட்டோ டிரைவர்கள் அண்ணாமலையை அடையாளம் கண்டு, காரை சூழ்ந்து கொண்டனர். வேறு வழியின்றி ஐந்து நிமிடம் துாக்கத்தையும் பொருட்படுத்தாமல், ஆட்டோ டிரைவர்களுடன் அன்புடன் பேசி, அனுப்பி வைத்த கையோடு, மீண்டும் பிரசாரத்துக்கு புறப்பட்டார்.

'கட்சிகளில், தேர்தல் பிரசாரத்துக்கு, சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளனர். ஆனால், பா.ஜ.,வில் மாநிலத் தலைவர் அண்ணா மலை தானே வேட்பாளராகவும், வேட்பாளர்களுக்கு தேர்தல் பிரசாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளராகவும் உள்ளார். ஓய்வில்லா உழைப்பாளியாக களப்பணி ஆற்றி வருகிறார்.

'சமீபத்தில் கூட, தனது தாயைப் பார்த்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆவதாக அவரே கூறியுள்ளார். ஓய்வின்றி கட்சிக்காக உழைக்கிறாரே' என்று, நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர், பா.ஜ.,வினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us