'டில்லி உஷ்ஷ்ஷ்...': இரண்டு மனைவிக்கும் தலா ரூ.1 லட்சம்!
'டில்லி உஷ்ஷ்ஷ்...': இரண்டு மனைவிக்கும் தலா ரூ.1 லட்சம்!
UPDATED : மே 12, 2024 11:48 AM
ADDED : மே 12, 2024 04:38 AM

தேர்தல் வாக்குறுதிகளில், மாநிலத்தின் நிதி நிலைமையைப் பற்றி கவலைப்படாமல், இலவசங்களை அள்ளி வீசி கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இதனால் மகிழ்ச்சியடைந்த ராகுல், பிரியங்கா லோக்சபா தேர்தல் பிரசாரத்திலும், பல இலவச திட்டங்களை அறிவித்து வருகின்றனர்; இதில் ஒன்று, 'மகாலட்சுமி காரண்டி' திட்டம். மகளிருக்கு 1 லட்சம் ரூபாய், அவரது வங்கி கணக்கில் தரப்படும் என்கிறது காங்., தேர்தல் அறிக்கை.
ஆனால், இதை வேறு விதமாக பிரசாரம் செய்து, கட்சி தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார், காங்கிரசின் முன்னாள் மத்திய அமைச்சர் காந்திலால் புரியா.
'உங்களுக்கு இரண்டு மனைவியர் இருந்தாலும் பரவாயில்லை; அவர்கள் இருவருக்குமே தலா 1 லட்சம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்' என, பிரசாரம் செய்து வருகிறார் காந்திலால்.
காங்., தேர்தல் அறிக்கையின்படி, ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் அதாவது மாதத்திற்கு 8,500 ரூபாய் ஓராண்டு வரை ஏழை பெண்களுக்கு வழங்கப்படும். இதை பா.ஜ., கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.