தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ 'ஸ்மோக் வகை உணவு உயிருக்கு ஆபத்து'

'ஸ்மோக் வகை உணவு உயிருக்கு ஆபத்து'

'ஸ்மோக் வகை உணவு உயிருக்கு ஆபத்து'


ADDED : ஏப் 25, 2024 12:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2024 12:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் உணவு பொருட்களை விற்பனை செய்தால், 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என, உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது. இதற்கிடையே, 'திரவ நைட்ரஜன்' பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவு பொருட்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கர்நாடகா மாநிலம், தாவணகெரேவில் 'ஸ்மோக் பிஸ்கெட்' சாப்பிட்ட சிறுவன், கடுமையான வலியில் துடிதுடித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே, 'ஸ்மோக் உணவு வகைகளை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம். அவை உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:

'திரவ நைட்ரஜன்' வாயிலாக தயாரிக்கப்படும், ஸ்மோக் வகை உணவுகள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை. அதீத குளிர் காரணமாக இவை சுவாசப்பாதை, உணவுப்பாதையை உறைய வைத்துவிடும். எனவே, திரவ நைட்ரஜன்களை, உணவு பொருட்களோடு பயன்படுத்தக்கூடாது.

இந்த உணவு வகைகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பாதிப்பை ஏற்படுத்தும். கண் பார்வை பாதிப்பு, பேசும் திறன் பாதிப்பு மற்றும் உயிருக்கும் ஆபத்தாக அமையும்.

எனவே, தமிழகத்தில், திரவ நைட்ரஜன் பயன்படுத்தி பிஸ்கட், பீடா, ஐஸ்கிரீம் போன்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யும், ஹோட்டல்கள், பார்கள் உள்ளிட்டவை கணக்கெடுக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.

உயிருக்கு ஆபத்தானதாக உணவு வகை இருந்தால், அதை விற்பனை செய்பவர்கள் மீது 10 ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். எனவே, வியாபாரிகள், பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் உணவு பொருட்கள் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்.

திரவ நைட்ரஜன் உணவு பொருளால் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. இதுவரை உயிரிழப்புகள் இல்லை. அதை தடை செய்வது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

'திரவ நைட்ரஜன் ஆபத்தானது!'

திரவ நிலை நைட்ரஜனில் பிஸ்கட்டை நனைத்து அதை உண்ணும்போது, நைட்ரஜன், காற்றின் வெப்பத்தில் ஆவியாகிறது. அதை உண்ணும்போது வாயில் இருந்தும், மூக்கின் துவாரங்களில் இருந்தும் புகை கிளம்புகிறது.திரவ நிலையில், நைட்ரஜன் இருக்கும்போது அதன் வெப்பநிலை, மைனஸ் 196 டிகிரியாக இருக்கும். பிஸ்கட்டை திரவ நைட்ரஜனில் முக்கி கையில் எடுத்து, வாயில் போட வேண்டும். அந்த சில நொடி நேரத்தில், திரவ நைட்ரஜன் ஆவியாகி விடும். ஆனால், திரவ நைட்ரஜனை அப்படியே பருகினால், கடும் குளிர்ச்சியான அது, நேரடியாக சுவாசப் பாதை மற்றும் உணவு குழாய் போன்றவற்றில் புண்களை ஏற்படுத்தும்.எவ்வாறு கடுமையான வெப்பம் தீக்காயங்களை ஏற்படுத்துமோ, அதேபோல், அதீத குளிர் தன்மையும் தீங்கை ஏற்படுத்தும்.குழந்தைகளுக்கு ஒரு பொருளை சாப்பிட தருவதற்கு முன், அதன் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்வது, பெற்றோரின் கடமை. எனவே, அப்பொருளின் தன்மை குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு அவசியம்.திரவ நைட்ரஜன் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக முக்கியம். எனவே, திரவ நைட்ரஜனை பயன்படுத்தி விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களில் ஏற்படும் ஆபத்துகள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மிக முக்கியம்.- டாக்டர், அ.ப.பரூக் அப்துல்லாஅரசு பொதுநல மருத்துவர், சிவகங்கை



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us