பாசன நீரை திருடி கிணற்றில் விடுறாங்க! விவசாயிகள், அதிகாரிகள் குழு கண்டுபிடிப்பு
பாசன நீரை திருடி கிணற்றில் விடுறாங்க! விவசாயிகள், அதிகாரிகள் குழு கண்டுபிடிப்பு
UPDATED : செப் 07, 2024 05:44 AM
ADDED : செப் 07, 2024 04:31 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, பி.ஏ.பி., கால்வாயில் இருந்து பாசன நீரை குழாய் பொருத்தி திருடி, கிணற்றுக்கு கொண்டு செல்வதை, விவசாயிகள், அதிகாரிகள் அடங்கிய குழுவினர், கண்டறிந்தனர்.
திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையில் இருந்து கடந்த மாதம், 18ம் தேதி பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீரை பயன்படுத்தி விவசாயிகள் நிலை பயிர் மட்டுமின்றி, காய்கறி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில், கோவை மாவட்டம், நெகமம் அருகே செட்டியக்காபாளையம், வடசித்துார் பகுதி விவசாயிகள், பாசன நீரை பயன்படுத்தி மக்காச்சோளம், தக்காளி உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடியில் ஈடுபட்டனர்.
![]() |
அப்போது, பெரியகளந்தை அருகே வடசித்துார் கிளை கால்வாய், 8.5 மீ., துாரத்தில், குழாய் அமைத்து தண்ணீர் திருட்டில் விவசாயி ஒருவர் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அங்குள்ள குழாயை அகற்றிய அதிகாரிகள், நெகமம் போலீசாரிடம், தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட விவசாயி மீது புகார் கொடுத்தனர்.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கால்வாய் அருகே பி.வி.சி., குழாய் அமைத்து, பாசன நீரை திருடி கிணற்றுக்கு கொண்டு செல்லப்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டது. அத்துமீறலில் ஈடுபட்டவர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, யாரும் நீர் திருட்டில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்,' என்றனர்.