sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

சுற்றுச்சுவரா; முழு அடைப்பு சுவரா? பழனி கிரிவல பாதையில் அத்துமீறல்

/

சுற்றுச்சுவரா; முழு அடைப்பு சுவரா? பழனி கிரிவல பாதையில் அத்துமீறல்

சுற்றுச்சுவரா; முழு அடைப்பு சுவரா? பழனி கிரிவல பாதையில் அத்துமீறல்

சுற்றுச்சுவரா; முழு அடைப்பு சுவரா? பழனி கிரிவல பாதையில் அத்துமீறல்


UPDATED : மே 29, 2024 06:14 AM

ADDED : மே 29, 2024 01:05 AM

Google News

UPDATED : மே 29, 2024 06:14 AM ADDED : மே 29, 2024 01:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகனின் அறுபடை வீடுகளில், மூன்றாம் படைவீடாக பழனி திகழ்கிறது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை உள்ளிட்ட விழாக்கள் வெகுவிமரிசையாக நடத்தப்படும்.

இத்திருவிழா காலங்களில் முருகனை தரிசனம் செய்ய, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மட்டுமல்லாது, வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் கூடுவர்.

வழக்கு


அப்போது, மலை அடிவாரத்தில் கிரிவலம் வரும் பாதைகளில், ஆக்கிரமிப்பாளர்கள் கடைகள் போட்டு, பக்தர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துகின்றனர் என, பக்தர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஜனவரியில் நீதிமன்ற உத்தரவுபடி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனால், பல ஆண்டுகளாக வியாபாரம் செய்தோர், தங்களின் வாழ்வாதாரத்திற்கு மாற்று இடம் தர வேண்டும் என, அறநிலையத் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், கோவிலின் கிரிவலப் பாதையில், எந்த ஒரு ஆக்கிரமிப்பும் எழாத வகையில், சாலையின் ஒரு பக்கம், 2.5 கி.மீ., துாரம், 4 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில், கோவில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

இதனால், தங்கள் சொந்த பட்டா இடத்தில் வீடுகள், கடைகள் கட்டி, பல ஆண்டுகளாக குடியிருப்போரும், வியாபாரம் செய்வோரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வீடு, கடைகளை அடைக்கும் வகையில், இந்த சுவர் கட்டப்படுகிறது. இதனால், நுாற்றுக்கணக்னோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் கூறியதாவது:

ஆண்டவர் கோவில் கிரிவலப்பாதை, 2.5 கி.மீட்டர் சுற்றளவு கொண்டது. இதில், கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தான் அதிகளவு வர்த்தக கடைகள் உள்ளன. நீதிமன்ற உத்தரவின்படி கிரிவல பாதையில் இருந்த ஆக்கிரமிப்புக்களை அகற்றியது வரவேற்கத்தக்கது.

அதேநேரம் ஆக்கிரமிப்பு ஏற்படக்கூடாது என்ற வகையில், கிரிவலப் பாதையை சுற்றி மூன்றரை அடி உயர சுற்றுச்சுவர் எழுப்புவது, எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.

நியாயமல்ல


கிரிவல பாதையில், 52 மடங்கள் உள்ளன; நுாற்றுக்கணக்கான சொந்த பட்டா உரிமையாளர்கள் வசிக்கின்றனர். அவர்கள் வசிக்கும் இருப்பிடம் மற்றும் வியாபார தலங்களுக்கு நுழைவு வாசலே கிரிவலப்பாதை தான். அதை முழுமையாக அடைத்து, இரண்டு அடி வழிவிடுவது என்பது கொஞ்சமும் நியாயமல்ல.

எதிர்காலத்தில் அந்த கடையிலோ அல்லது குடியிருப்பிலோ தீ விபத்து ஏதேனும் ஏற்பட்டால், அங்கு இருப்போரால் வெளியேற கூட முடியாத சூழல் உள்ளது. இந்த ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு விசாரணை முடியாததால், நாங்கள் இதை எதிர்த்து மேல்முறையீடு கூட செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம்.

இதுகுறித்து அறநிலையத் துறையும், கோவில் நிர்வாகமும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர்- -






      Dinamalar
      Follow us